ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வரும் பிரிட்டன் மக்கள் – அதிர்ந்து போயுள்ள கிறித்துவ உலகம்


                                                                                                                                                                       from;http://www.tntj.net/79492.html
பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும், தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் லட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறித்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்துகொண்டு இருகின்றனர்.
இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன் என்ற தலைப்பில் “The Independent” என்ற பிரிட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது.(பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html)
கிறித்துவ உலகத்தின் அடித்தலமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறித்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால் தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில்தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
2001 – ல் எடுக்கப்பட்ட கணக்கெடுபில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலைநகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கண்க்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).
பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்ற்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள்தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர்  கூறுகையில் நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன்மடங்காக இருக்கும் என தெரிவித்தார் .
ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரசாத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர், இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உன்னத பாட்டு போன்ற ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த பைபிளை தூக்கி எரிந்துவிட்டு உண்மை மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுகொள்கின்றனர்.
இஸ்லாத்தை அறிவு பூர்வமாகவும், ஆதரபூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் எதிர்க்க முடியாத கிறித்தவ உலகம் பொய் பிரச்சாரங்கள் மூலமாக இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க முழுவீச்சில் செயல்பட்டுவருகின்றது. பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற இரண்டு இளைஞர்களை சுட்டுகொன்ற CIA இவர்கள் தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என பத்திரிக்கையில் செய்திகளை பரப்பி மக்களை அச்சமுற செய்கின்றனர், “Faith Matters” ஆய்வில் இங்கிலாந்தில் வரும் செய்திகளில் 32 % செய்திகள் இஸ்லாத்தை தீவிரவாத்தோடு சம்மந்தபடுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.
கிறித்துவர்களிடம் இருப்பது, பொய்களும், ஆபாசங்களும், மனிதனுக்கு உதவாத உலரல்களும் நிறைந்த பைபிள் தான் இந்த பைபிளை வைத்து கொண்டு கிறித்துவகளை தக்கவைக்க முடியாது என்பதை கிறித்தவ மிஷினரிகள் நன்றாக உணர்ந்துள்ளன, பொய்களையும் புரட்டுகளையும் சொல்லி கிறித்துவர்களை ஏமாற்றி கிறித்துவத்தை வாழவைத்து கொண்டிருக்கின்றனர் பாதிரிமார்கள். மேற்கத்திய நாடுகள் போடும் பிச்சை டாலருக்காளுக்காக விவாத வேஷம் போடும் சான்(SAN) போன்ற அமைப்புகள் கூட பைபிள் இறைவேதம் என நிரூபிக்க பைபிளிலிருந்து ஒரு ஆதரத்தையும் காட்ட முடியாமல் கண்டபடி உலறி கொட்டியது.
ஒரு காலத்திலும் கிறித்துவர்களால் அறிவுபூர்வமாகவும், ஆதார பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் “கிறித்துவம் இறைவனின் மார்க்கம்” என்பதை நிருபிக்க முடியாது என்பது இவர்களின் இஸ்லாத்திற்க்கெதிரான பொய்பிரசாரங்களிலிருந்து தெளிவாக விளங்குகின்றது.
பொது மேடையில் வாசிக்கும் தகுதி கூட இல்லாத பைபிள் மூலம் இஸ்லாத்தை தழுவும் கிறித்துவர்களை தடுக்க முடியாது என்பதை உணர்ந்துதான் முஸ்லீம்களை பார்த்து “பயங்கரவாதி” “பழமைவாதி” வெற்று கோஷம் போடுகின்றது.
அல்லாஹ்வின் கிருபையால் பிரிட்டனில் வாழும் கிறித்துவர்கள் பைபிளின் தரத்தை அறிந்து சத்திய மார்க்கமான இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். கேத்தரீன் என்ற கிறித்துவ பெண்மனி இஸ்லாத்தை ஏற்று தற்போது பிரிட்டன் இஸ்லாமிய அமைப்பிற்க்கு தலைவியாக உள்ளார். இவர்களை போன்ற பலர் கிறித்துவர்கள் மத்தியில் தொடர்ந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்து பலரை கிறித்துவத்திலிருந்து விடுவித்து நேர்வழியான இஸ்லாத்தின் பக்கம் அழைத்துவருகின்றனர்
பிரிட்டனை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய சிலர் கருத்து தெரிவிக்கையில் …
பவுல் மார்ட்டின் : எனக்கு எனது நண்பர்கள் மூலம் குர்ஆன் அறிமுகமானது, குர்ஆனை படிக்கும் போது அதனுடைய அறிவியல் உண்மைகளை பார்த்து வியந்து போனேன், (குர்ஆன் இறை வேதம் என்பதை உணர்ந்து) இஸ்லாத்தை தழுவினேன்.
(குர்ஆன் குறித்த விவாததிற்க்கு வரமால் ஓடி ஒளியுன் சானின் (SAN) தந்திரம் தற்போது விளங்குகின்றது, லண்டனை சேர்ந்த இந்த “பவுல் மார்ட்டின்” போல் கிறித்துவர்கள் குர் னின் அறிவியல் அற்புதங்களை பார்த்து ஆயிரகணக்கில் இஸ்லாத்தை தழுவிவிடுவார்கள் என பயந்து போய் தந்திரங்கள் செய்து தப்பிக்க நினைகின்றது சான்(SAN)).
டென்னிஸ் ஹார்ஸலி : நான் ஒரு கிறித்துவர், கத்தோலிக்க பள்ளியில் படிதேன், நண்பர்கள் மூலம் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, பின்பு நான் குர்ஆனை படிக்கும் போது ஏசு, மேரி, தோரா பற்றிய பல்வேறு உண்மையான தகவல்கள் குர்ஆனில் இருந்தது. எனவே கிறித்துவத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை ஏற்பது இயற்க்கையானது என கருதுகின்றேன் (அதாவது நீங்கள் உண்மையாக ஏசுவை நம்புவதாக இருந்தால், மேரியை மதிப்பாதாக இருந்தால், தோராவை நம்புவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதுதான் உண்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்)
கதீஜா ரியோபுக் : நான் கிறித்துவ குடும்பத்தில் பிறந்தவள், என் குழந்தையுடன் வார வாரம் சர்ச்சிற்க்கு செல்வேன், இஸ்லாத்தில் இணைந்ததும் கிடைத்த அமைதி சர்ச்சில் கிடைக்கவில்லை, ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்த எனது தாயால் நான் இஸ்லாத்தை ஏற்றதை ஜீரனித்து கொள்ளமுடியவில்லை, நான் இப்போது ஹிஜாப் அணிகின்றேன், நோன்பு வைக்கின்றேன், வாழ்வில் அமைதியை உணர்கின்றேன்
ஹனா தஜீமா : நான் பல மதங்களை ஆய்வு செய்தேன், குர்ஆன் அறிவு பூர்வமாக இருந்தது, பெண்களுக்கு உரிமையை தருவாதக இருந்தது எனவே ஆழ்ந்த மத பற்றுள்ள எனது குடும்பத்திலிருந்து நான் இஸ்லாத்தை தழுவினேன்
இது கிறித்துவத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய சிலரின் கருத்துக்கள், பின்பற்றுவதற்க்கு பைபிளில் ஒன்றும் இல்லை (புரக்கணிப்பதற்க்கு நிறைய உள்ளது), எனவே இந்த மக்களுக்கு உண்மைய எடுத்து சொன்னால் இஸ்லாத்தை ஏற்க்க கோடிகணக்கான கிறித்துவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயாராக இருகின்றனர் இன்ஷா அல்லாஹ். நாம் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை இந்த கிறித்துவ மக்களுக்கு எடுத்து சொல்வதுதான் மீதமிருக்கும் வேலை
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே சான்று கூறுவோருடன் எங்களைப் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர். (அல் குர்ஆன் 5: 83)
கிறித்துவ மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துவைக்கும் இந்த புனித பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து செய்து கொண்டு இருகின்றது அல்லாஹ்வின் உதவியுடன் கிறித்துவ பாதிரிமர்களுடன் பல விவாதங்களை செய்து உண்மையை நிலை நாட்டியுள்ளது,
சான் (SAN) மட்டும் குர்ஆன் குறித்த விவாத்திற்க்கு வந்தால் குர்ஆனின் அற்புதங்களை கிறித்தவர்களுக்கு விளக்கி, பைபிளில் மிச்சம் மீதியுள்ள உலரள்களை தோலுரித்து காட்டி “குர்ஆன் தான் இறை வேதம்” என்பதை நிச்சயம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அல்லாஹ்வின் உதவியுடன் நிருபித்து காட்டும் இன்ஷா அல்லாஹ்.
S.சித்தீக்.M.Tec

சனி, 28 ஏப்ரல், 2012

சமுதாய மக்களின் கவனத்திற்கு...

ஹிந்துக்களின் வேதாகமத்தில் கல்கி,


ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்- பண்டிட் வைத் ப்ரகாஷ்


இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி
விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.
ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய
அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.
பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.
இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார்.ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல்,
ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரைஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.
1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு
இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.
3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம். ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ்
என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ்
மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.
4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்..
5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.
6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.
7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில்,
‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?
8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன்
ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.
9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன
சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள்,
ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில்
குறிப்பிடப்பட்டிருக்கும்
கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.
பேராசிரியர் பண்டிட் வைத்  ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது
மீர் அப்துல் மஜீத்.
இதை தமிழில் மொழி பெயர்த்த சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!!

உங்களது PF-பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம் இருக்கு?




வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணம் செலுத்தும் அனைத்து அரசுதனியார் நிறுவன ஊழியர்களின் கணக்கு விவரங்களை இணையதளத்திலேயே பார்க்க முடியும். இதற்கு முன்னால் உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தற்போது அது எவ்வளவு என்பதை அவ்வபோதே தெரிந்து கொள்ளலாம்.
இந்த விவரத்தை தற்போது பார்போம்.
இணைய சுட்டி...இதனை கிளிக் செய்து அந்த இணைய தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல் செய்தால் உங்களது விவரங்கள் தெரியும்..

அதில் know your EPF balance என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளதுபோல் விண்டோ ஓபன் ஆகும்.
அதில் Click Here என்பதை கிளிக் செய்து பின்பு வரும் விண்டோவில் படத்தில் சுட்டி காட்டிய இடத்தில் தங்களது மாநிலத்தை தேர்வு செய்தால் படத்தில் காட்டியுள்ளதுபோல் தோன்றும் அதில் உங்களது EPFO OFFICE-யை தேர்வு செய்தால்

மேலே உள்ளது போல் தோன்றும் அதில் சுட்டி காட்டப்பட்ட இடத்தில் தங்களது விவரங்களையும் (முக்கியமாக தொலைபேசி எண்ணை தர வேண்டும்) கொடுத்து submit செய்தால் இணையத்தில் காட்டாது உங்கள் பணத்தின் விவரம் உங்களது தொலைபேசிக்கு ஒரு செய்தி(SMS)ஆக வரும்அதில் உங்களது தொகையின் விவரம் தெரிந்துவிடும்...அவ்வளவுதான் நண்பர்களே..

கொசுறு:பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் தங்களது PF பிராவிடண்ட் பண்ட் பணத்தை வாங்குவதற்கு பல விதிமுறைகளைச் சொல்லி அலையோ அலை என்று அலைய விட்டு உயிரை எடுப்பார்கள்.. ஆனால்சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் தனது PFபிராவிடண்ட் பண்ட் பணத்தைக் தர கோரி விண்ணப்பம் தாக்கல் செய்தால், விண்ணப்பம் தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் அவருக்கு பணம் போய் சேர வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

உலக அமைதியின்மைக்கு காரணம் மதவாதமா? இனவாதமா?


தொன்று தொட்டு இன்றுவரை மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாய் சிந்தப்பட்டுள்ளது. மதம் பிடித்த மனிதன்தான் மனிதனை கொல்கின்றான். இன்று உலகில் காணப்படும் அமைதியின்மைக்கு மதங்கள்தான் காரணம் மதங்கள் அழிந்தால்தான் மதங்களை ஒழித்தால்தான் மனித இனம் அமைதி பெறும் என்றெல்லாம் நாத்திகர்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இன்று உலகில் நடைபெறும் சம்பவங்ளை பார்க்கும்பொழுது இதில் உண்மையிருக்குமோ என்று மக்களுக்கும் சந்தேகம் ஏற்படுகின்றது. மதத்தின் பெயரால் இன்று மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுவதற்கு இந்த சந்தேகங்களும் ஒரு காரணமாகும்.
    மதங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் மதவாதிகள் தங்களுக்குள் சண்டை போடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். ‘மத்ஹப் நஹீன் சிகாதா ஆபஸ் மே பேர் ரக்னா’ என்று அல்லாமா இக்பால் கவிதை பாடினார். எந்த மதமும் தங்களுக்குள் பேதங்களைப் பாராட்ட சண்டையிட்டுக்கொள்ள கற்றுத்தரவில்லை. என்பது இதன் அர்த்தமாகும். பிறகு மதங்களின் பெயரால் இந்தச் சண்டை ஏன்? இந்தக் கேள்விக்கு நாம் விருப்பு வெறுப்பின்றி ஆராய்வோம்.
    மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாக சிந்தப்படுகின்றது என்ற நாத்திகர்களின் வாதம் பொய்யானது. அடிப்படை இல்லாதது.
    உலகில் நடைபெற்ற மிகப்பெரிய யுத்தங்களான கருதப்படுவது முதலாவது உலக யுத்தமும், இரண்டாவது மகா உலக யுத்தமும்தான். இந்த யுத்தங்கள் ஈவு இறக்கமில்லாமல் லட்சக்கணக்கான மனித உயிர்களை அநியாயமாக பலிவாங்கின. இந்த யுத்தங்கள் மதத்தின் பெயரால் நடத்தப்பெற்ற யுத்தங்கள் அல்ல. இனத்தின் பெயரால், மண்ணின் பெயரால் நடத்தப்பட்ட யுத்தங்களாகும். இந்தியாவை எடுத்துக்கொண்டால் மகாபாரத யுத்தம் போல் இதுவரை ஒரு யுத்தம் நடந்ததில்லை. இதுவும் மதத்தின் பெயரால் நடந்த யுத்தம் அல்ல. ஆதிக்க வெறியால் நடபெற்ற யுத்தமாகும். அடுத்து இலங்கை என்ற நாட்டையே இராமர் எரித்து சாம்பலாக்கிய மகாயுத்தம், இதில் மோதிய இராமரும் இராவணரும் இருவரும் இந்துக்கள்தான். இதுவும் மதத்தின் பெயரால் நடந்த யுத்தமல்ல. பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நடத்தப்பட்ட யுத்தம். இவையெல்லாம் புராண இதிகாசகால யுத்தங்கள்.
    வரலாற்று ரீதியாக பார்ப்போமானால் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய யுத்தம் கலிங்கத்துப் பரணியில் சாம்ராட் அசோகன் நடத்திய யுத்தம். இதுவும் மத்ததின் பெயரால் நடந்த யுத்தம் அல்ல. நாடு பிடிக்கும் ஆசையில் நடந்த யுத்தங்களாகும். சந்திரகுப்தன், அலெக்சாண்டர், நெப்போலியன் போன்றோர் நடத்திய யுத்தங்களும் நாடு பிடிக்கும் யுத்தங்களே. அன்மையில் நடைபெற்ற யுத்தமான வளைகுடாப் போர் கூட நாடு பிடிக்கும் யுத்தமே.
    இன்று உலகில் வல்லரசுகள் மோதுவது மதத்தின் பெயரால் அல்ல. ஆதிக்கத்தின் பெயரால்தான் மோதுகின்றன. ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சி மதத்தின் பெயரால் நடைபெற்றதல்ல. அது வர்க்கப் போராட்டம். இதில் பத்து லட்சத்திற்கும் மேலாக மக்கள் மடிந்தார்கள். ஆப்ரிக்கா கண்டத்திலும், அமெரிக்க கண்டத்திலும் நடைபெறுவது வெள்ளையன் கருப்பன் என்ற இனப்போராட்டம். நம் நாட்டிலும் மேல்ஜாதி, கீழ்ஜாதி என இனத்தின் பெயரால்தான் மனிதனின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. தங்களை பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் என்று தமிழகத்தில் வலம்வரும் இவர்கள் நடத்தும் போராட்டங்களும் இனப்போராட்டங்களே. இலங்கையில் நடபெற்று வரும் இரத்தக் களரிக்குக் காரணம் இன வெறியே தவிர மதவெறி அல்ல.
     இனம், மொழி, நாடு, வர்க்க நலன் என்ற எண்ணங்கள் தலை தூக்கும் பொழுதெல்லாம் உலகில் மனித இரத்தம் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது. உலகில் சாந்தியும் சமாதானமும் இல்லாமல் போனதற்கு இப்படிப்பட்ட வாதங்கள்தான் காரணமாகும். வகுப்பு வாதம் வளருவதற்கு இவைகள்தான் துணைபோகின்றன. இப்படிப்பட்ட வகுப்பு வாதங்களுக்கு சாவு மணி அடிக்க இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கம் ஒன்றே வழி. அது ஒன்றுதான் இனவாதத்திற்கும், வகுப்பு வாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது. எந்த மார்க்கம் வகுப்பு வாதத்திற்கு எதிராக இருக்கின்றதோ, அந்த மார்க்கத்தவர்களை வகுப்பு வாதிகள் என்ற பட்டம் சூட்டி இந்த திருடர்கள் தப்பிக்கப் பார்க்கின்றனர்.
    மதத்தின் பெயரால் சண்டைகளே நடக்க வில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். நடக்கின்றன. ஆனால் இனத்தின் பெயரால், ஆதிக்கத்தின் பெயரால், மண்ணின் பெயரால் நடைபெறும் சண்டைகளுக்கு முன்னால் இந்த சண்டைகள் ஒன்றும் அவ்வளவு பெரிய சண்டைகள் அல்ல. உதாரணத்திற்கு சொல்கின்றேன்: இஸ்லாத்தை நிலைநாட்ட நபி(ஸல்) அவர்களும் சில யுத்தங்களில் கலந்து கொண்டார்கள். இதைப் பற்றி பேராசிரியர் K.S.ராமாகிரிஷ்ணராவ் எழுதிய “இஸ்லாமிய மார்க்கத்தின் திருத்தூதர் முஹம்மத்(ஸல்)” என்ற தலைப்பில் எழுதிய நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
    இறைத்தூதர் யுத்த களத்தின் அணுகுமுறையை முழுக்க மாற்றினார். அரேபிய தீபகற்பம் முழுக்க அவர் ஆளுகையின் கீழ் வந்தபோது, அவர் வாழ்நாளில் ஏற்பட்ட எல்லா போர்களிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு சில நூறுகளை தாண்டவேயில்லை. அவர் அரேபியாவின் காட்டுமிராண்டிகளுக்கு தொழக்கற்றுக் கொடுத்தார். தனியாகவல்ல; யுத்தத்தின் ஆரவாரங்களுக்கு நடுவேயும், கூட்டமாகத் தொழக் கற்றுத் தந்தார். எப்பொழுதெல்லாம் தொழுகை நேரம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் தொழுகையை கைவிடக்கூடாது; ஏன் ஒத்திப் போடக்கூடாது என்று அவர் போதித்தார். படைகளில் ஒரு பிரிவினர் தொழுது கொண்டிருக்கும் பொழுது மற்றொரு பிரிவினர் போரிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு பிரிவினர் தொழுகையை முடித்த பிறகு போர் செய்ய செல்வார்கள். காட்டுமிராண்டித்தனம் நிலவிய காலத்தில் யுத்தங்களே மனிதத் தன்மை உடையதாக ஆக்கப்பட்டது. கொள்ளையடித்தல், ஏமாற்றுதல், வாக்கு முறித்தலுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் வெளியிடப்பட்டன. குழந்தைகள், பெண்கள், வயதான ஆண்களை காயப்படுத்தக்கூடாது; கொல்லக்கூடாது என்று கட்ட்ளைகள் வெளியிடப்பட்டன. பேரிச்ச மரத்தை, பல மரங்களை வெட்டக்கூடாது என்றும், மத குருமார்களை அவமானப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
    மெக்காவை அவர் கைப்பற்றியபோது அவரது அதிகாரம் உச்சகட்டத்தில் இருந்தது. எந்த நகரம் அவரது போதனைகளை கேட்க மறுத்ததோ, எந்த நகரம் அவரையும் அவரை பின்பற்றுவோரையும் பெரும் சித்திரவதை செய்ததோ, எந்த நகரம் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் துரத்தி அடித்ததோ, 200 மைல்களுக்கு அப்பால் ஒரு இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்த நிலையிலும் இடையறாத பகையில் தாக்குதல்களை தொடுத்ததோ, அந்த நகரம் இப்பொழுது அவரது காலடியில் கிடந்தது. தன்மீதும் தன்னை பின்பற்றுவோர் மீதும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக யுத்த விதிகளின்படி அவர் பழி தீர்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் என்ன செய்தார்? முஹம்மதுவின் இதயத்திலிருந்து அன்பும் இரக்கமும் பெருக அவர் “உங்கள் மீது எந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை” என்று கூறினார்.
    தற்காப்புக்காக மனித உள்ளங்களை ஒன்று படுத்த யுத்தத்தை அவர் ஏன் அனுமதித்தார் என்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நோக்கம் நிறைவேறிய பொழுது அவர் தன்னுடைய மோசமான எதிரிகளைக்கூட மன்னித்துவிட்டார். தன்னுடைய சிறிய தந்தையார் ஹம்ஸாவை கொன்றவர்கள் அவரது உயிரற்ற உடலை கீறி ஈரலை வெளியே எடுத்து கடித்த மிகவும் கொடூரமான எதிரிகளைக் கூட அவர் மன்னித்துவிட்டார்.
    உலகம் தழுவிய சகோதரத்துவம், மனித குலத்தின் சமத்துவம், போதித்த கொள்கைகள் மனித இனத்தை மேம்படுத்த அவர் தந்த போதனைகளில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. எல்லா பெரிய மதங்களும் அந்தக் கொள்கைகளை போதித்துள்ளன. ஆனால் இறைத்தூதர் முஹம்மது மட்டும்தான் அந்தக் கொள்கைகளை உண்மையில் நடைமுறைப் படுத்தியவர் ஆவார். அதன் மதிப்பு எதிர்காலத்தில் சர்வதேச உள்ளுணர்வு முழுக்க விழித்தெழும் வேளையில் முழுமையாக உணரப்படும். இன வேற்றுமைகள் மறையும். வலிமை வாய்ந்த உலக சகோதரத்துவக் கொள்கை நிலை பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    இன்று உலகில் நடைபெறும் மதச்சண்டைகளுக்கு அந்த மதங்களல்ல காரணம். இனவெறி பிடித்த ஆதிக்க சக்திகள். தங்கள் சக்திகளை மறைக்க விலை போகும் சில மதவாதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள். தங்கள் தில்லுமுல்லு, சூழ்ச்சிகளை மறைக்க மதங்கள் மீது பழிபோடுகின்றனர். சிலுவை யுத்தங்களுக்கு காரணம் கிறிஸ்துவ பாதிரிமார்கள். பாலஸ்தீன யுத்தங்களுக்கு காரணம் யூதகுருமார்கள். ஆப்கானிஸ்தான் நிலைமைக்கு காரணம் சில சுயநலமிக்க முல்லாக்கள். பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதற்கும், அதன் பின் நடந்த கலவரங்களுக்கும் சில சாதுகளும், சன்னியாசிகளும்தான் காரணம். முஸ்லிம்களிடையே நடைபெறும் சுன்னத் ஜமாஅத், ஷியா கலவரங்களுக்கு சில முஸ்லிம் முல்லாக்களே காரணம். ஆக இந்த சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் காரணம் இந்த மதங்களை தங்கள் கைக்குள் வைத்து ஆட்டி படைக்கும் மதக்குருக்கள்தான் காரணம். இவர்களை ஓரங்கட்டினால், தனிமைப்படுத்தினால் இந்த சண்டைகள் தானாக நிற்கும்.
    மதங்கள் வேண்டும். மதங்கள் தான் மனிதனை மேன்மைப்படுத்தும். மதங்கள்தான் உலகில் அமைதியை கொண்டுவரும். ஆனால் குருக்கள், சன்னிதானங்களை தலையில் தூக்கி ஆடுவோமேயானால் அமிர்தமும் விஷமாகிவிடும். உலக பிரச்னைக்கு ஒரே தீர்வு மதங்களை தூய்மைப்படுத்துவது, புரோகிதரர்களின் கைகளிலிருந்து மதங்களை விடுவிப்பது. இதை விடுத்து மதங்களை குற்றம் சொல்வதில் பயனில்லை. உலக அமைதிக்கு ஒரே வழி. ஒன்று இன வெறி, ஜாதி வெறி, மொழி வெறி, ஆதிக்க வெறி, வகுப்பு வெறி இவை அனைத்தும் களையப்படவேண்டும். மதங்களிலிருந்து புரோகிதரர்களைக் களையெடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை

அப்பாவி இஸ்லாமியர் சித்ரவதை அமெரிக்க விசாரணைக்குழு அட்டூழியம்



அபுதாபி, ஏப்.20 -

அமெரிக்காவிற்கு அடிக் கடி வந்து செல்லும் இஸ்லா மியர்களைக் கடுமையாக விசாரிக்கும் நடவடிக்கை யால் அபுதாபி நகரில் இஸ் லாமிய இளைஞர் ஒருவர் சித்ரவதை செய்யப்பட்டி ருக்கிறார்.

யோனஸ் ஃபிக்ரே என் கிற 33 வயது இளைஞர் அபு தாபியைச் சேர்ந்தவர். ஜூன் 2011ல் இவரைத் திடீரென்று காவல்துறையினர் என்று சொல்லிக் கொண்ட சிலர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதிருந்து 106 நாட்கள் அவர் தனி மையில் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். இந்தத் தக வலை ஸ்வீடனின் ஸ்டாக் ஹோம் நகரில் செய்தியா ளர்களைச் சந்தித்தபோது அவர் தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், அது மிகவும் சிரம மான காலகட்டம், அங்கு நீங்கள் எதற்காக அடைக் கப்பட்டுள்ளீர்கள் என்பது தெரியாது. எங்கிருக்கிறீர் கள் என்பதும் தெரிய வாய்ப் பில்லை. ஒரேயொருவரு டன்தான் பேசிக் கொள்ள முடியும், தனக்குத்தானே பேசிக்கொள்வதுதான் அது. இல்லையென்றால் சுற்றியிருக்கும் சுவர்களிடம் பேசிக் கொள்ள வேண்டி யதுதான். மனிதர்களிடமி ருந்து இவ்வளவு நாட்கள் ஒருபோதும் நான் பிரித்து வைக்கப்படவில்லை என்றார்.

2003 ஆம் ஆண்டில் தான் இவர் இஸ்லாமுக்கு மாறியுள்ளார். போர்ட் லேண்டில் உள்ள பெரிய மசூதிக்கு ஏன் அடிக்கடி சென்றீர்கள் என்று இவரி டம் அமெரிக்க காவல் துறையினர் துளைத்து, துளைத்துக் கேள்வி கேட்டி ருக்கிறார்கள். அதில் என்ன தவறு என்று அவருக்குப் புரியவில்லை. இதைத்தான் மாறி, மாறிக் கேட்டனர். ஜூன் 1 அன்று தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட இவர், செப்டம்பர் 14 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் ஸ்வீடனில் அடைக்கலம் கோரிய யோனஸ், தற்போது அங்கு வசித்து வருகிறார். தனது வழக்கறிஞர்களுடன் செய் தியாளர்களைச் சந்தித்து உண்மையை அம்பலப்படுத் தினார். தன்னிடமிருந்து விபரங்களைத் தெரிந்து கொள்ள கொடுமையான சித்ரவதைகளை அனுப விக்க வேண்டியிருந்தது என்று அப்போது அவர் தெரிவித்தார். போர்ட் லேண்டு மசூதி தொடர்பாக எங்களை விசாரித்தார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லும் மூன்றாவது நபர் யோனஸ் ஃபிக்ரே என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாவியான யோனஸ் ஃபிக்ரேயை சித்ரவதை செய்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறையை வழக்கறிஞர்கள் வலியுறுத் தியுள்ளனர்.

   என்ன நீங்க கேட்கறது புரியுது:நம்ம அப்துல் கலாமையே எல்லாம் அவுத்து பாத்தவங்க அவனுங்கனு !அது வேர விசயமுங்கோ இது வேரங்கோ

புதன், 18 ஏப்ரல், 2012

செய்திர்களா??? பதில் கூறுங்கள்???





1. பஜர் தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுதீர்களா?



2. காலைப் பொழுதிற்கான திக்ரை செய்தீர்களா?








3. ஐந்து நேரத் தொழுகையையும் அதனதன் முதல் நேரத்தில் சரியாகத் தொழுதீர்களா?



4. ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் வரையறுக்கப்பட்ட திக்ரை செய்தீர்களா?



5. ஒரு நாளுக்குரிய 13 ரகஅத் சுன்னத்தையும் தொழுதீர்களா?



6. முஸ்லீம் உம்மத்துக்காக குனூத் அல்லது துஆ செய்தீர்களா?



7. உங்களது தாய், தந்தைக்காக துஆ செய்தீர்களா?



8. இன்று ஏதாவது ஒரு நன்மையை ஏவினீர்களா?



9. இன்று ஏதாவது ஒரு தீமையைத் தடுத்தீர்களா?



10. பர்ளான தொழுகையை ஒன்றுக்கு மேற்பட்ட நேரங்களில் பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதீர்களா? (ஆண்களுக்கு)



11. குர்ஆனின் ஒரேயொரு வசனத்தையாவது அதன் பொருளோடு படித்து, அறிந்து, உணர்ந்தீர்களா?



12. ஏதாவது ஒரு புதிய ஹதீஸை அதன் பொருள் விளக்கத்தோடு படித்து அறிந்தீர்களா?



13. குறைந்த அளவாக குர்ஆனின் ஒரு பக்கமாவது ஓதினீர்களா?



14. கற்றல் அல்லது கேட்டலின் மூலம் அறிவைப் பெருக்க முயன்றீர்களா?



15. நீங்கள் சரியாக கடைபிடிக்காத ஒரு புதிய சுன்னத்தை கடைபிடித்தீர்களா?



16. ஒரு முஸ்லீமின் மகிழ்ச்சிக்காவது காரணமாய் இருந்தீர்களா?



17. உங்களுடைய பெற்றோரை மகிழ்வித்தீர்களா? அவர்களை ஆரத்தழுவி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தினீர்களா?



18. யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருந்தீர்களா? யாரையும் பற்றி புறம் பேசாமல் இருந்தீர்களா?



19. யாரைப்பற்றியும் வீணாண, தவறான எண்ணங்கள் வராமல் தங்கள் மனதை தூய்மையாக வைத்தீர்களா?



20. அனுமதிக்கப்பட்டதா இல்லையா என சந்தேகமான விஷயத்தை விட்டும் தவிர்ந்து கொண்டீர்களா?



21. உங்கள் உடல் நலத்தில் இயன்ற அளவு கவனம் செலுத்தினீர்களா?



22. தர்மம் செய்தீர்களா? (பொருளால்)



23. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அல்லது அதன் பாதிப்புக்கு எதிராக எதாவது செய்தீர்களா?



24. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹி வஸல்லம் அவர்களுக்காக பிரார்த்தித்தீர்களா?



25. பாவமன்னிப்புக்காக தவ்பா மற்றும் இஸ்திஃபார் செய்தீர்களா?



26. இந்த தீனுக்காக குறைந்தது 10 நிமிடங்கள் உழைத்தீர்களா?



27. உங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த வகையில் ஏதாவது ஒரு நன்மையான காரியத்தை மறைவாகச் செய்தீர்களா?



28. உண்ணும் போதும் பருகும்போதும் வீண் விரயங்களை தவிர்த்தீர்களா?



29. அஸர் நேரத்து திக்ரை செய்தீர்களா?



அஸ‌ருக்கு பின் ஓத வேண்டிய ஸ‌ல‌வாத்தை ஓதினீர்களா?

30. உங்கள் மரண சாசனத்தை எழுதினீர்களா? அல்லது அதில் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்தீர்களா?



31. இறப்பு மற்றும் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தீர்களா?



32. தஹஜ்ஜத் நேரத்தில் குறைந்தது இரண்டு ரகஅத்களாவது தொழுதீர்களா?



33. வித்ரு தொழுகையை தொழுதீர்களா?



34. உங்களுடைய சுவர்க்க வாழ்வுக்காகவும், நரக மீட்சிக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தீர்களா?



35. உளு உடைய நிலையிலேயே உறங்கச் சென்றீர்களா?



36. எந்த மனிதர் மீதும் கெட்ட எண்ணம் ஏதும் இல்லாத நிலையில் உறங்கச் சென்றீர்களா

பூட்டிய அறைக்குள் தூங்கினால் சிறுநீரக கோளாறு ஏற்படும்.

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.இதை வாத நோய்கள் என்பார்கள்.
பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.
அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.
விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
  
-தகவல் : செல்வராஜ்
நன்றி தமிழ் தாயகம்

சனி, 14 ஏப்ரல், 2012

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்


அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.
மஹ்ஷர் வெளியின் அகோரம்
மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.
பின்வரும் ஹதீஸுகள் அதை தெளிவு படுத்துகின்றது,
சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)
இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

1. நீதியான அரசன்:

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.
மக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.
நீதமென்பது: தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலதுபுறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்

வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.
(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 18:9-13
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.

3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்

பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.
இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.
பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.
யார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்

இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.
யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)

காளி(z) இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார். இன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக? வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.
அதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.
எனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
குகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.
ஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக!
பிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.

6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்

இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.
மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.
இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.
ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்
பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,
1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.
2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.
3. அதற்காக கவலைப்பட வேண்டும்.
4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.
5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)
6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும்.  இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.
அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!
அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக்   
                                                                                                                ஆமீன்