திங்கள், 28 மே, 2012

கடவுளின் வார்த்தை


சூரியனும் கோள்களும் தனக்குரிய பாதையில் நகர்கிறது பற்றி கூறும் அல்குர்ஆன்

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வ...ருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2

“நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன; அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:5

சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.

சூரியன் ஒரு இடத்திலேயே நிலை பெற்றிருக்கிறது. அது நகரவில்லை என்றுதான் சமீபகாலம் வரை அறிவியல் அறிஞர்கள் நம்பி வந்தனர். கோபர் நிகஸ், கெப்ளர், கலிலியோ போன்ற தலை சிறந்த அறிவியல் அறிஞர்கள் கூட சூரியன் நகரவில்லை. அது ஒரே இடத்தில் நிற்கிறது என்றே கூறி வந்தனர்.

அரை நூற்றாண்டு காலம் தமது மொட்டை மாடியில் வானத்தை ஆராய்ந்து 1783 ஆம் அண்டு விஞ்ஞானி ஹெர்ஷல் சூரியனும் நகர்கிறது என்ற உண்மையை கண்டு பிடித்தார். இதே கருத்தை 'சூரியனும் நீந்துகிறது' என்று அழகான வார்த்தைகளைப் போட்டு கூறிய குர்ஆனை நினைத்து பிரமிக்கிறோம்.

அறிவியல் அறிஞர் பி.டூயிக் அவர்கள் நட்சத்திரங்களின் நகர்வை ஒரு உதாரணத்தோடு விளக்குகிறார். ஒரு நட்சத்திரம் நமது நிலவின் அகலம் எவ்வளவோ அவ்வளவு தூரம் நகர்ந்ததாக பூமியிலிருந்து பார்க்க வேண்டுமானால் அதற்காக 190 வருடங்கள் காத்திருக்க வெண்டும் எனக் கூறுகிறார். சுருங்கக் கூறின் பூமியிலிருந்து பார்க்கும் போது நட்சத்திரங்கள் யாவும் நகராமல் ஒரே இடத்திலேயே இருப்பதாகத் தோன்றும் என்பதே இதன் பொருளாகும். நமது கண்களுக்கு நட்சத்திரங்கள் எதுவும் நகருவதாக பார்க்க முடியவில்லை. அப்படி நகருவதாக ஒரவர் 1400 வருடங்களுக்கு முன்பு சொல்வதாக இருந்தால் அவர் வானியல் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். அல்லது இந்த செய்தி இறைவனிடமிருந்து வந்ததாக இருக்க வேண்டும்.

இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது; தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது; அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல;
கடவுளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று

அய்யய்யோ இந்தியாவை கானோம்


அய்.நா. மாமன்றம் உலக மகிழ்ச்சி அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது! மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கும் (முதல் அய்ம்பது) நாடுகளின் வரிசை - உலக நாடுகளில் - எப்படி உள்ளன? எந்த தர வரிசை என்பதை பல அளவுகோல்கள் ஆய்வுகள் நடத்தி, கண்டு அறிந்து வெளியிட் டுள்ளார்கள்!

அந்த வரிசைப்படி, (மகிழ்ச்சி அளவின் தரவரிசைப்படி)

1) டென்மார்க், 2) ஃபின்லாந்து, 3) நார்வே, 4) நெதர்லாந்து, 5) கனடா, 6) சுவீட்சர்லாந்து, 7) சுவீடன், 8) நியூசிலாந்து, 9) ஆஸ்திரேலியா, 10) அயர்லாந்து, 11) அமெரிக்க அய்க்கிய நாடுகள் (USA) 12) கோஸ்டோரீகா, 13) ஆஸ்திரியா, 14) இஸ்ரேல், 15) பெல்ஜியம், 16) லக்சம்பர்க், 17) அய்க்கிய அரபு எமிரேட்ஸ் (U.A.E.) ( 18) இங்கிலாந்து (U.K.) 19) வெனிசுலா, 20) அய்ஸ்லாந்து 21) பனாமா, 22) ஸ்பெயின், 23) பிரான்ஸ், 24) மெக்சிகோ, 25) பிரேசில், 26) சவுதி அரேபியா, 27) போர்ட்டோ ரீகோ, 28) இத்தாலி, 29) குவைத், 30) ஜெர்மனி, 31) கத்தார், (இங்கிருந்துதான் எழுது கிறேன்)  32) துர்க்மெனிஸ்தான், 33) சிங்கப்பூர் 34) பெலீஸ் (Belize) 35) சைப்பிரஸ், 36) செக் குடிஅரசு, 37) கவுத்திமேலா, 38) டிரினிடாட் & டூபேகோ 39) அர்ஜென்டினா, 40) ஜமைக்கா, 41) கொலம்பியா 42) கிரீஸ், 43) சிலி, 44) ஜப்பான், 45) கயானா, 46) தைவான், 47) மால்ட்டா, 48) எல்சால்வடார், 49) ஸ்லோவேனியா, 50) உருகுவே.
(source: World Happiness Report United Nations)

இதில் - மகிழ்ச்சி நிலவும் மக்களை வரிசைப்படுத்திய நாடுகளில் பெரும்பாலானவை சிறிய நாடுகளே!  பரப்பளவு, மக்கள் தொகை, அடிப்படைக் கட்டுமான வசதிகள், படிப்பறிவு, சுகாதாரம் (நல் வாழ்க்கை) கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளம், அவை எல்லாவற்றையும்விட சமூக ஆதரவு, நண்பர் குழு, குடும்ப உறவுகள் - இவைகளின் ஒட்டு மொத்தமான ஆய்வுகள் கூட்டுத் தொகையினைப் பயன்படுத்தியதன் அடிப் படையில் இந்த தர வரிசை அமைந் துள்ளன.

நிறைய பணம் சம்பாதிப்போர், அதிகம் உள்ள நாடுகளில் மகிழ்ச்சி நிறைந்தவர்களாக அவர்கள் இருப்பதில்லை என்பதை  பண்பாடு, மனவளம், நோயற்ற வாழ்வு, சுற்றுச்சூழல் தூய்மை இப்படி பலவற்றையும் ஆய்வு செய்து அய்.நா. மகிழ்ச்சி அறிக்கை முடிவுக்கு வந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கறுப்பு இன மக்கள் அதிகம் வாழும் நாடுகள்தான் மிகவும் துன்பம், வறுமை, வாழ்க்கைத் தரக் குறைபாடு எல்லாமும் உடை யவை!

ஏன் நம் நாடு இந்தியா  தர வரிசையில் முந்த  இல்லை? 
இந்தியாவில் எல்லா வளமும் எல்லா பலமும் உள்ளது எல்லோரும் சொல்லுகிறார்கள் இந்தியா வல்லரசாகும்! என்று ஆனால் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைவது எப்போது?

ஞாயிறு, 27 மே, 2012

புதிய மின்னஞ்சல்கள் வந்ததா என்று எஸ்.எம்.எஸ் -ஸில் அறிய


email-to-sms


தினமும் நாம் மின்னஞ்சல் பார்ப்பதற்கு நேரம் நமக்கு கிடைக்காது  . அது போன்ற நேரங்களில் நமக்கு முக்கியமான மின்னஞ்சல்கள் வந்ததா என்று நாம் எப்படி அறிந்து கொள்ளலாம் . அதற்கு தான் இந்த தளம்நமக்கு உதவுகிறது .இது ஒரு அருமையான தளம் . நமக்கு வரும் புதுபுது மின்னஞ்சல்களை நமக்கு உடனடியாக தெரியப் படுத்துகிறது . இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்களுக்கும் இது நன்றாக செயல் படுகிறது .


site2sms

1.இந்த தளத்திற்கு சென்று http://www.site2sms.com/userregistration.asp

பெயர் ,பாலினம் ,மின்னஞ்சல் ,தொழில் ,மாநிலம் ,மொபைல் நம்பர்,கடைசியாக உங்கள் city name  ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள் .

பதிவு  செய்து முடித்தவுடனே உங்கள் மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வரும் அதில் உங்கள் கடவு சொல் இருக்கும் .

அப்படி எஸ்.எம்.எஸ் வரவில்லை என்றால் கீழே எண்ணுக்கு போன் செய்யவும் . அல்லது கீழே உள்ள மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்

011-47606762 Or Mail us on support@site2sms.com


2.பின் டாஸ் போர்டு -க்கு செல்லுங்கள் . settings page-க்கு செல்லுங்கள் . 
  


3.அந்த பக்கத்தில்  எந்த கிழமை எந்த நேரம் எஸ்.எம்.எஸ். வர வேண்டும் என்று கொடுத்து விடுங்கள் . 

4.eg:123456789012@site2sms.com இப்படி ஒரு மின்னஞ்சல் கொடுப்பார்கள் . 


5.அந்த மின்னஞ்சல் நம் மின்னஞ்சல் அமைப்புகளில் கொண்டு வந்து சில மாற்றங்கள் செய்ய வேண்டும் . 

forward-email

login your mail-id : click settings - click " FORWARDING/POP/IMAP "

forward a copy of incoming  mail-ID என்பதில் அந்த மின்னஞ்சலை (123456789012@site2sms.com) கொடுக்கவும் .

உங்கள் மின்னஞ்சலுக்கு வந்த மெயில் -ஐ கன்பார்ம் செய்து கொள்ளுங்கள் .

இனி உங்களுக்கு புது மின்னஞ்சல்கள் உங்கள் மொபைலுக்கும் வரும் .

நன்றி  ..

சனி, 26 மே, 2012

கிறிஸ்தவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் – திரித்துவம் (Trinity)!


ABU HUDHAIFA

நாம் சாதாரண கிறிஸ்தவர் ஒருவரைப் பார்த்து கடவுள் எத்தனைப் பேர் என்றால், ‘ஒருவர்’ தான் என்று உடனே பதில் வரும்
. சில விபரமறிந்த கிறிஸ்தவர்களிடம் கேட்டால், ‘கடவுள் ஒருவர் தான்! ஆனால் மூவரில் இருந்து செயல்படுகிறார்’ (Triune God) என்று கூறுவார்கள்.

கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற ‘திரித்துவம்’ (Concept of Trinity) என்ற மூன்று கடவுள் கொள்கை பைபிளில் கூறப்படாத கடவுள் கொள்கையாகும். இது பைபிளின் பல்வேறு வசனங்களுக்கு முற்றிலும் முரண்பாடுடையதாக இருக்கிறது. மேலும் ஒரே ஒரு கடவுள் என்று கூறிக்கொண்டே கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்பது பல கிறிஸ்தவர்களுக்கு விசித்திரனமானதாகவும் அறிவுக்கு எட்டாததாகவும், புரியாத புதிராகவும் இருக்கிறது மேலும் பல கிறிஸ்தவர்கள் தங்களின் கொள்கையையே கைவிடுவதற்கும் காரணமாக இருக்கிறது.
குழப்பங்களின் மொத்த வடிவம் தான் கிறிஸ்தவர்களின் இந்த ‘திரித்துவக் கடவுள் கொள்கை’ என்றால் அது மிகையாகாது. ஏனெனில் எவ்வித லாஜிக்கும் இல்லாத இந்த திரித்துவக் கோட்பாடு பல கிறிஸ்தவர்களின் மனதிலே சிந்தனைகளாக, கேள்விகளாக உழன்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால் திரித்துவம் குறித்து கேள்விகள் கேட்காதே! இத்தகைய கேள்விகள் சாத்தானின் புறத்திலிருந்து வருகிறது. கேள்வி கேட்டால் நீ பெரும்பாவம் செய்த பாவியாகி விடுவாய்! என்ற பயமுறுத்தலின் காரணமாக பல கிறிஸ்தவர்கள் தங்களின் மனதிற்குள் இயற்கையாக எழக்கூடிய அறிவுப்பூர்வமான இத்தகைய சிந்தனைக் கேள்விகளை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டு நமக்கேன் வம்பு என்று உண்மையை அறிந்து கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர்.

கடவுள் என்பவர்,

- ஆரம்பம் மற்றும் முடிவு அற்றவராக இருக்க வேண்டும்.

- எவரிடத்திலும் எத்தகைய தேவையுமற்றவராகவும், ஆனால் அவரால் சிருஷ்டிக்கப்பட்டவர்ககோ அவரது தேவையுடைவர்களாக இருக்கின்றனர்.

- கடவுளுக்கு ஓய்வோ அல்லது உறக்கமோ தேவையில்லை, ஏனென்றால் ஒரு கணநேரம் கூட தவறாது இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ளவர்களையும் பாதுகாத்து வருபவன்.

- மனிதனுக்கு இருக்கின்ற பலஹீனங்களான உணவு உண்ணுதல், இயற்கைத் தேவைகள் (மலம், ஜலம் கழித்தல்), உறக்கம், பிறப்பு, மரணம், நோய், பிறரை சார்ந்திருத்தல் போன்ற எத்தகைய பலஹீனங்களும் கடவுளுக்கு இல்லை,

- அவர் தனித்தவர், அவருடைய ஆட்சி, அதிகாரத்திற்கு யாருடைய உதவியும் தேவையுமில்லை,

- அவர் விரும்பியதை செய்கிறார், அவரைக் கேள்வி கேட்போர் யாருமில்லை,
- கடவுளின் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு நொடிப்பொழுதும் இந்த பிரபஞ்சத்தின் ஆட்சி அதிகாரம் அகன்று விடுவதில்லை.

- மனிதர்களின் பாவங்களை மன்னிப்பதற்கு கடவுளை வேறு எதுவும் நிர்பந்திப்பந்திப்பதில்லை. அவர் நாடியவர்களின் பாவங்களை மன்னிக்கிறார், நாடியவர்களை தண்டிக்கிறார்.
இந்த கட்டுரை யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! மாறாக  கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் சிந்தித்து தெளிவு பெற வேண்டுமென்பதே எமது அவா!

எனதருமை கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே! கடவுளின் இத்தகைய குணாதிசயங்களை மனதில் இருத்திக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடைகாண முன்வாருங்கள்! சிந்தித்து தெளிவு பெறுங்கள்! தவறுகள் இருந்து எங்களுக்கு ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினால்  நன்றியறிதலுடன் திருத்திக் கொள்வோம்.

திரித்துவம் (Trinity) குறித்த சில சிந்தனைக் கேள்விகள்: -
Q 1. பெரும்பாலான கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் தேவன், முழுமையான மனிதபிறவியெடுத்து முழுமனிதனாக (இயேசுவாக)வும்  இருந்தார், அதே நேரத்தில் முழு முதற் தேவனாகவும் இருந்தார் என்பது நம்பிக்கையாகும். 
மனிதன் என்பவன் முடிவு உள்ளவன். தேவன் என்பவர் முடிவு அற்றவர். இந்நிலையில் எப்படி முடிவு உள்ளவரும் முடிவு அற்றவரும் ஒன்றாக முடியும்?

Q 2. தேவன் என்பவர் நிரந்தரமற்றவைகள் மற்றும் எத்தகைய தேவைகளிலிருந்தும் விலகியிருப்பவராகவும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். முழுமனிதன் என்பது தேவனின் தன்மை இல்லாதவன் ஆவான்.
இந்நிலையில் இப்பூவுலகில் வாழும் போது தன்னுடைய தாய் மற்றும் பிறருடையதேவையுடையவராக வாழ்ந்த முழுமனிதரான இயேசு கிறிஸ்து எப்படி தேவனின் தன்மையுடையவரா ஆக முடியும்?

Q 3. விபரமுள்ள கிறிஸ்தவர்கள் சிலர் ‘திரித்துவத்திற்கு’ உவமைகள் கூற முற்படுவர். சிலர் ‘முட்டையை உதாரணம் கூறுவர், முட்டையில் ஓடு, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு என்ற மூன்றும் சேர்ந்து ஒரே முட்டைக்குள் இருப்பது போன்று ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.
ஒரே முட்டையில் சில நேரங்களில் இரண்டு மஞ்சள் கரு கூட இருக்குமே அதனால் சில நேரங்களில் தேவன் நால்வரில் கூட இருப்பாரோ?

Q 4. இன்னும் சிலர், ஒரே ஆப்பிள் பழத்தில் அதன் தோல், கனி மற்றும் விதை என்று மூன்றும் ஒன்றில் இருப்பது போல் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒருவராக இருக்கிறார்கள் என்பர்.
ஆப்பிள் பழத்தின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட பல விதைகள் இருக்கின்றனவே அது போல் தேவன் பலரில் ஏன் இருக்கக் கூடாது?

Q 5. இன்னும் சிலர் ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் இருப்பது போல் ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறுவர்.
சதுரம் மற்றும் செவ்வகத்திற்கு நான்கு மூலைகள் இருக்கின்றனவே! அது போல் ஏன் ஒரு கடவுள் நான்கு பேரில் இருக்கக் கூடாது?

Q 6. இன்னும் சிலர் சற்று அறிவுப்பூர்வமாக விளக்கமளிப்பதாகக் நினைத்துக்கொண்டு, ஒருவர் சிலருக்கு தந்தையாகவும், இன்னும் சிலருக்கு சகோதரராகவும், அதே நேரத்தில் கல்லூரியில் முதல்வராகவும் இருப்பதில்லையா? அதே போல் ஒரே ஒரு கடவுள் மூவராக இருந்து செயல்படுகிறார் என்பர்.

இந்த மூவரில் தந்தையாகவும், சகோதரராகவும் மற்றும் கல்லூரியில் முதல்வராகவும் இருக்கக் கூடிய ஒருவர் மரணித்தால் தந்தை, சகோதரர் மற்றும் முதல்வர் ஆகிய மூவரும் தான் மரணமடைந்ததாகும்!. அது போல் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டபோது பிதா மற்றும் பரிசுத்த ஆவியும் கொல்லப்பட்டனரா?

Q 7. இன்னும் சிலர், திரித்துவத்திற்கு அறிவியல் மூலமாக விளக்கம் கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருப்பதைப் போல் ஒரு கடவுள் மூவரில் இருக்கிறார் என்பர்.

நீரானது திட, திரவ மற்றும் வாயு நிலையில் இருந்தாலும் H2O என்ற அதன் மூலப்பொருள் (components)   என்றுமே மாறாமல் எப்போதும் H2O ஆகவே இருக்கிறது! ஆனால் பிதா, தேவகுமாரன் மற்றும் பரிசுத்த ஆவி மூவரும் வெவ்வேறு மூலப்பொருட்களால் ஆனவரும் வெவ்வேறு தன்னை உடையவர்களும் ஆயிற்றே! முழு மனிதராகிய இயேசு கிறிஸ்து சதை மற்றும் எலும்புகளால் ஆனவர். ஆனால் மற்றவர்கள் ஆவியானவர்களாயிற்றே (made of sprit)? ஆவியானவர்களுக்கு கை, கால்கள் இருக்காதே!
 (பார்க்கவும் லூக்கா 24:36-40)
லூக்கா, 24 வது அதிகாரம், வசனங்கள் 36-40:

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்(தார்).
தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு உண்ண உணவும், உடுக்க உடையும் தேவைப்பட்டது. இயற்கை உபாதைகளை வெளியேற்ற வேண்டிய அவசியமேற்பட்டது. அத்தகைய அவசியங்கள் ஆவியானவர்களுக்கு தேவையில்லையே?

Q 8. (தேவ) குமாரன் என்பது தெய்வத் தன்மையை விட அந்தஸ்தில் குறைவானது. தேவன் என்பவர் யாருடைய மகனாக இருக்கவும், இருந்திருக்கவும் முடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து அவர்கள் எப்படி ஒரே நேரத்தில் “மகன் தன்மை உடையவராகவும் “தெய்வீகத்” தன்மை உடையவராகவும் இருக்கமுடியும் ?

Q 9. “என்னை கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:9) என்ற பைபிளின் வசனத்தைக் கிறிஸ்தவர்கள் குறிப்பிட்டு இந்த வசனத்தின் மூலம், “தாம் கடவுள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் கூறியதாக கூறுவார்கள்.
ஆனால் பைபிளின் அதே யோவான் (5:37) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து,
“என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை” என்று கூறவில்லையா?

Q 10. இயேசு கிறிஸ்து “தேவகுமாரர்” என்றும் “மேசியா” என்றும் “இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்” (Saviour)என்று ம் அழைக்கப்படுவதால் அவரை கிறிஸ்தவர்கள் கடவுள் என்கின்றனர். அமைதியை ஏற்படுத்துபவர்களை  “தேவகுமாரர்கள்” என்று இயேசு கிறிஸ்து அவர்கள் குறிப்பிட்டதாக பைபிளில் காணமுடிகிறது. தேவனின் விருப்பங்களையும் திட்டங்களையும் பின்பற்றுகின்ற ஒருவனை யூதர்களின் வழக்குப்படி “தெய்வ மகன்” அல்லது “தேவகுமாரன்” என்று கூறப்படுவதுண்டு.
 பார்க்கவும்

 ஆதியாகமம் 6:2,4, யாத்திராகமம் 4:22,  சங்கீதம் 2:7  மற்றும் ரோமர் 8:14
.
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 6:2)
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்ற போது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். (ஆதியாகமம் 6:4)

அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். (யாத்திராகமம் 4:22)
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; (சங்கீதம் 2:7)

மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். (ரோமர் 8:14)

ஹிப்ரு மொழியில் “மேசியா” என்பதற்கு தேவனின் அருள் பெற்றவர் என்று கூறுவதுண்டு. “இரட்சகன்” (savior) என்ற வார்த்தை இயேசுவிற்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டிருப்பதை பைபிளில் காண்கிறோம்.
“கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்” (II இராஜாக்கள் 13:5)

 
ஆகையால் “தேவகுமாரர்” (Son of God) அல்லது “இரட்சிப்பவர் அல்லது இரட்சகன்” (savior) போன்ற பெயர்கள் இயேசு கிறிஸ்துவிற்கு மட்டுமின்றி இன்னும் பலருக்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இயேசு கிறிஸ்து தான் “தேவன்” அல்லது அவர் மட்டும் தான் “தேவனின் உண்மையான குமாரர்” என்பதற்கு இந்த பெயர்கள் அல்லது வார்த்தைகளைத் தவிர்த்து வேறு என்ன ஆதாரம் இருக்கிறது?

Q 11. நானும் பிதாவும் “ஒன்றாயிருக்கிறோம்” (யோவான் 10:30) என்ற வசனத்தின் மூலம் இயேசு கிறிஸ்து அவர்கள் தாமும்  தேவனும் ஒன்று என்று கூறியதாக கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே யோவான் அதிகாரம் 17,வசனம் 21-23 ல் இயேசு கிறிஸ்து அவர்கள் தம்மையும் தம் சீடர்களையும் மற்றும் தேவனையும் பற்றி குறிப்பிடுகையில் ஐந்து இடங்களில் “ஒன்றாயிருக்கிறது” பற்றிக் கூறுகிறார்கள். இந்நிலையில் “ஒன்றாயிருக்கிறது” என்று முன்னர் கூறிய வார்த்தைக்கு (யோவான் 10:30) ஒரு அர்த்ததையும் யோவான் 17:21-23ல் ஐந்து இடங்களில் கூறப்பட்டிருக்கின்ற “ஒன்றாயிருக்கிறது” என்ற வார்த்தைக்கு வேறு அர்தத்தையும் கொடுப்பது ஏன்?

Q 12. தேவன் என்பவர் மூவரில் ஒருவராகவும், ஒருவரில் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time) இருக்கிறாரா? அல்லது  ஒரு நேரத்தில் ஒருவராக (one at a time) மட்டும் தான் இருக்கிறாரா?

Q 13. தேவன் என்பவர் ஒருவராகவும் மற்றும் மூவராகவும் ஓரே நேரத்தில் (at a time)  இருந்தால் அந்த மூவருமே முழுமையான தேவனாக (கடவுளாக) இருக்கமுடியாது. இந்நிலையில் இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்திருந்த நேரத்தில் அவர் முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது அல்லது பரலோகத்தில் பிதாவாக முழுமையான கடவுளாக இருந்திருக்க முடியாது .
இந்நிலையில், இயேசு கிறிஸ்து அடிக்கடி குறிப்பிட்ட “அவருடைய தேவன் நம்முடைய தேவன்” மற்றும் “அவருடைய கடவுள் நம்முடைய கடவுள்”  என்பது ஒன்றுக்கொன்று முரண்பாடுகளாகத் தோன்றவில்லையா?

மேலும் இது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருந்த சமயத்திலும் உயிர்த்தெழுந்த நேரத்திலும் முழுமையான தேவனாக இருக்கவில்லை என்று ஆகாதா?

Q 14. தேவன் என்பவர் ஒரே நேரத்தில் (at a time) ஒருவராகவும், மூவராகவும் இருந்தால், இயேசு  கிறிஸ்து பூமியில் தாயின் கருவறையில் இருந்த போதும், தனக்குத் தானே எதுவும் செய்து கொள்ள முடியாமல் தன் தாயின் உதவியை எதிர் பார்த்திருந்த பச்சிளம் குழந்தையாக இருந்த போதும், வளர்ந்து வாலிபராகி பூமியில் இருந்த போதும் பரலோகத்தில் தேவனாக இருந்து இந்த பிரபஞ்சத்தை ஆட்சி செய்து அதில் உள்ள கோடானு கோடி ஜீவராசிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தவர் யார்?

Q 15. தேவன் ஒருவராகவும் மூவராகவும் ஒரே நேரத்தில் (at a time) இருந்தால், இயேசு கிறிஸ்து யூதர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதும், சிலுவையில் அறையப் பட்டு கொல்லப்பட்டதிலிருந்து உயிர்த்தெலுதல் வரையிலுமான இடைப்பட்ட அந்த மூன்று இரவு மூன்று பகலின் போதும்  பரலோகத்தில் தேவனாக இருந்து உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தவர் யார்?
அந்த நேரத்தில் பிதாவாகிய தேவன் இந்த பிரபஞ்சத்தை இரட்சித்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் உங்களுடைய திரித்துவம் தோற்றுவிடுகிறது. ஏனென்றால் பிதா வேறு, தேவ குமாரன் வேறு என்றாகி நீங்கள் பல தெய்வ வணக்கமுடையவராகிவிடுகிறீர்கள்.
இல்லை அப்போதும் தனக்குத் தானே உதவி செய்து கொள்ள இயலாமல் தன் தாயாரின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்த நிலையிலிருந்த இயேசு கிறிஸ்து தான் அல்லது மரணித்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட அந்த இயேசு கிறிஸ்து தான் இந்த பிரபஞ்சத்தையும் இரட்சித்துக்கொண்டிருந்தார் என்று நீங்கள் கூறுவீர்களா?
மேலும் இந்த திரித்துவக் கொள்கை பரலோகத்தில் இருக்கும் பிதாவே தம்மை அனுப்பியதாக இயேசு கிறிஸ்து  கூறுகின்ற பல வசனங்களுக்கு முரண்பாடாக இல்லையா?

Q 16. கிறிஸ்தவர்களின் கூற்றுப்படி: -
              
பிதாவும் (Father)  கடவுள்   
               தேவகுமாரனாகிய இயேசுவும் (Son)  கடவுள்
               பரிசுத்த ஆவிவும் (Holy Ghost) கடவுள்

ஆனால்,
பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை
தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை
பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை.
எளிமையான கணக்குப்படி,

G என்பது தேவனையும் (God)

F என்பது பிதாவையும் (Father)

S என்பது தேவகுமாரனையும்  (Son)

H என்பது பரிசுத்த ஆவியையும்  (Holy Ghost)  குறிக்கிறது என வைத்துக் கொள்வோம்.
இதன் படி,

F=G, S=G, மற்றும் H=G என்றிருந்தால்,
அதாவது

பிதா என்பவர் தேவன்! (F=G)
தேவகுமாரன் என்பவர் தேவன்! (S=G)
பரிசுத்த ஆவி என்பது தேவன்! (H=G)
என்றிருந்தால், F=S=H என்று ஆகிவிடும்.
ஆனால் மேற்கூறிய இரண்டாவது கருத்துப்படி     F ≠ S ≠ H
அதாவது

பிதா என்பவர் தேவகுமாரன் இல்லை! (F ≠ S)
தேவகுமாரன் என்பவர் பரிசுத்த ஆவி இல்லை! (S ≠ H)
பரிசுத்த ஆவி என்பது பிதா இல்லை! (H ≠ F)

இது கிறிஸ்தவர்களின் திரித்துவத்தில் காணப்படுகின்ற மிகப் பெரிய முரண்பாடு அல்லவா?

Q 17. இயேசு கிறிஸ்து கடவுளாக இருந்திருந்தால் தன்னை good master என்றழைத்த நபரிடம் தன்னை God என்று அழைக்க வேண்டாம் என்றும் பரலோகத்தில் உள்ள தன்னுடைய தேவனைத் தவிர வேறுயாரும் God இல்லை என்று ஏன் கூறவேண்டும்?

Q 18. மாற்கு 2:29 ல் இயேசு கிறிஸ்து “நம்முடைய தேவன் ஒரே ஒரு தேவனே” என்று கூறியிருக்க கிறிஸ்தவர்கள் தேவன் மூவரில் ஒருவர், ஒருவரில் மூவர் என்று ஏன் கூறுகின்றனர்?

Q 19. ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதற்கு “திரித்துவம்” மிக முக்கியமானது என்றிருந்தால் ஏன் இயேசு கிறிஸ்து தம்முடைய வாழ்நாளில் இதை போதித்து வலியுறுத்திக் கூறவில்லை?
மேலும், திரித்துவம் என்றாலே என்ன என்று அறியாமலேயே இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் எப்படி கிறிஸ்தவர்களாக கருதப்பட்டார்கள் திரித்துவக் கோட்பாடு தான் கிறிஸ்தவத்தின் முதுகெலும்பு என்றிருந்தால் அதை இயேசு கிறிஸ்து பல்வேறு சந்தர்பங்களில் போதித்து அதை மிக மிக வலியுறுத்திக் கூறி மக்களுக்கு விளக்கியிருப்பார்களே!

Q 20. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் இயேசு கிறிஸ்து பிதாவிடத்திலே பிரார்த்தனை செய்தார்?

அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். (மத்தேயு 11:25)
தெய்வம் தெய்வத்திடமே பிரார்த்தனை செய்து கொண்டதா?

Q 21. இயேசு கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியும், பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதா அறிந்திருக்கின்ற அனைத்தையும் இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவி அறிந்திருக்கவில்லை?

அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். (மாற்கு 13:32) மற்றும் (மத்தேயு 24:36)

Q 22. இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று என்றிருந்தால், ஏன் பிதாவுக்கு இருக்கும் ஆற்றல் போன்று இயேசு கிறிஸ்துவிற்கு இல்லை?
நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. (யோவான் 5:30) மற்றும் யோவான் 6:38.

                        சிந்தித்து தெளிவு பெறுங்கள் சகோதர, சகோதரிகளே!

பெட்ரோல் விலை உயர்வு


சென்னையில் ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.77.54 ஐ தொட்டுவிட்டது. இதில் வரிகள் மட்டும் ரூ.34.97 ஆகும்.பெட்ரோலின் அடக்க விலை பங்க்கிற்கு வரும்போது ரூ.42.57 மட்டுமே ஆகும். இந்த வரிகளில் மத்திய அரசும், மாநில அரசும் ஆள்மாற்றி மாற்றி அடிக்கிற கஸ்டம்ஸ், எக்ஸைஸ், வாட் ஆகியன அடங்கும். தமிழக அரசின் விற்பனை வரி 27 சதவீதம் மூலம் நுகர்வோரிடமிருந்து கிடைப்பது ரூ.16.56 ஆகும். வரிகள் தவிர டீலர் கமிசன் ரூ.1.50ம் இதற்குள் இருக் கிறது.

என்னிடம் பிடுங்கிஎனக்கே தானமா

அரசு எண்ணெய் வணிக நிறுவ னங்களுக்கு 2010-11ல் குறை வசூ லாக (ருசூனுநுசு சுநுஊடீஏநுசுலு) ஆன தொகை ரூ.72000 கோடிகள். இது தான் அமைச்சர் ஜெயபால் ரெட்டி தொடுக்கிற வாதம் ஆகும். ஆனால் இன்னொரு தகவலை அவர் தருவ தில்லை. 2010-11 ல் பெட்ரோல் மீதான கஸ்டம்ஸ், எக்சைஸ் மூலம் மத் திய அரசுக்கு கிடைத்தது எவ்வளவு ? ரூ.92000 கோடிகள். அதே வருடம் மாநில அரசுக்கு பெட்ரோல் விற்பனை வரிகள் வாயிலாகக் கிடைத்தது எவ் வளவு? ரூ.78000 கோடிகள். நாய் எலும்பை எடுத்து நாய்க்கும் போட்டு மீதத்தை விருந்தும் வைக்கிறார்.


அரசாங்கமாஆலமர ஜோஸ்யமா

அடுத்த மாதம் விலை குறையலாம் என ஆலமரத்தடி ஜோசியர் போல ஆரூடம் சொல்கிறது மத்திய அரசு. சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை கள் குறைவதால் ரூ.1.50 லிருந்து ரூ.1.80 வரை குறையலாமாம். ஆனால் வணிக இதழ்கள் இன்னொரு குண் டைப் போடுகின்றன. ரூபாய் மதிப்பு சரிவது பெட்ரோல் விலை உயர்வதற் கான அழுத்தத்தைத் தரும் என்பதே. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 100 பைசா விழுந்தால் பெட்ரோல் ஒரு லிட்டர் 77 பைசா கூடுமாம். உலகச் சந் தையின் கருணைதான் என கை விரிக் கிறது மத்திய அரசு. ஆண்டவன் சொல் றான்…. அருணாச்சலம் செய்றான்கிற மாதிரி.


ஈரத் துணியும், சொகுசு காரும்


பெட்ரோல் விலை கூடினால் பல சரக்கு, காய்கறி விலையெல்லாம் கூடி விடுமே என வயிற்றில் கட்டுவதற்கு ஈரத் துணியைத் தேடிக் கொண்டிருக் கிறார்கள் சாமானிய மக்கள். ஆனால் பெட்ரோல் விலை கூடியதால் உடனடி யாக விலைக் குறைப்பிற்கு ஆளாகி யுள்ள சரக்கு எது தெரியுமா? மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார் ஆகியன ரூ.50000 வரை பெட்ரோல் மாடல் கார்களுக்கு தள் ளுபடி அறிவித்திருக்கின்றன. பொரு ளாதாரப் பாதையின் சூட்சுமம் பாருங் கள்.

மால்களுக்கும்’ மானியம்

அடுத்து டீசலைக் குறி வைக்கி றார்கள். இந்தியாவில் நுகரப்படும் 6.5 கோடி மெட்ரிக் டன் டீசலில் 65 சதவீதம் கார்கள் உள்ளிட்ட சொகுசு வாகனங் களால் நுகரப்படுவதேயாகும். பெரிய பெரிய மால்களில்- தொலைத் தொடர் பிற்கான கோபுரங்களில் பயன்படுத்தப் படும் டவர்களிலும் டீசல் பயன்படுத் தப்படுகிறது.இப்பயன்பாட்டிற்கும் ஒரு லிட் டருக்கு ரூ.15.35 மானியம் தரப்படு கிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.922 கோடிகளுக்கு குவால்காம் ஏசியா பசிபிக் நிறுவனத்தின் 49 சதவீதப் பங்குகளை வாங்கி தில்லி, மும்பை, அரியானா, கேரளாவிற்கான 4ஜி தக வல் சேவையைக் கைப்பற்றியுள்ளது என்பது இன்றைய ’சூடான செய்தி’.


பற்றாக்குறைக்குஎங்கே போவது?

பெட்ரோல் விலையை உயர்த்தா விட்டால் நிதிப்பற்றாக்குறையைக் கட் டுப்படுத்த முடியாது என கண்ணீர் வடிக் கிறார்கள். ஆனால் 2012-13 ல் வரிச்சலுகைகளால் அரசுக்கு ஏற்படுகிற இழப்பு ரூ.5 லட்சம் கோடிகள் ஆகும். அதில் விலை மதிப்பற்ற ஆபரணங்கள், தங்கத்திற்கு தரப்பட்டுள்ள சலுகை மட் டுமே ரூ.57000 கோடிகள்.


கொசுறு


சிரிப்பதா? அழுவதா? தெரிய வில்லை. ஒரு ஆங்கில நாளிதழ் இரண்டு பத்திச் செய்தியொன்றை அரைக்கால் பக்கத்திற்குப் போட்டு ’இரக்கமற்ற ஆட்டோ டிரைவர்கள்’ என்று தலைப்பு போட்டுள்ளது. சென்னை நங்கநல்லுhரில் குறைந்த பட்சக் கட்டணத்தை ரூ.40லிருந்து 50 ஆக ஏற்றிவிட்டார்களாம்

திங்கள், 21 மே, 2012

ஏன் இந்த இழிநிலை?

 சகோதரர்களே!
உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். முஸ்லிமுக்கு இறையருள் கிடைக்கிறது என்பது உங்கள் நம்பிக்கை. ஆனால் கொஞ்சம் கண்ணை திறந்து பாருங்கள்! இறையருள் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறதா? மறுமையில் கிடைக்கக்கூடியதை நீங்கள் பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஆனால் இம்மையில் இன்று உங்கள் நிலையைப்பற்றி யோசனை செய்யுங்கள்.
இவ்வுலகில் நீங்கள் கோடிக்கணக்கில் இருக்கிறீர்கள். இவ்வளவு மக்கள் தொகைகொண்ட நீங்கள் போக்கற்றவர்களாகவும் மதிப்பற்றவர்களாகவும் இருக்க மாட்டீர்கள்; இறைவனைத் தவிர வேறு யாருக்கும் குனியாத உங்கள் தலை வெறும் மனிதர்களுக்கு முன்னால் குனியாது; எவரும் சூரையாடத் துணியாத உங்கள் கண்ணியம் இன்று மண்ணோடு மண்ணாகியிருக்காது. அறியாமையும் வறுமையும் கடனும் உங்கள் நிழல்போல் தொடர்ந்து வரா! ஆனால் இவையெல்லாம் உங்களை இப்போது பீடித்திருக்கின்றன. சற்று சிந்தனை செய்யுங்கள். இதுதானா இறைவனுடைய அருள்? இது இறையருளல்ல; வெளிப்படையாகத் தெரிகின்ற இறைக்கோபம்.

முஸ்லிமாய் இருக்கின்றான், அதே சமயத்தில் இறைக்கோபத்திற்கும் ஆளாகின்றான் என்று சொல்லும்போது வியப்பு தோன்றுகிறது அல்லவா? முஸ்லிமாய் இருந்தாலும் இறைவனால் வெறுக்கவும்படுகிறான். முஸ்லிமாய் இருப்பதோடு அடிமையாகவும் இருக்கிறான் இது எவ்வளவு அசாத்தியமான செய்தி?

இறைவனின் கட்டளைகளை உணர்ந்து அவற்றிற்கு அடிபணிந்து நடக்கக்கூடிய உங்களுக்கு மேலே இறைவழிபாடு இல்லாத மக்களை அவன் உயர்த்துவானா? உங்களுடைய வணக்கத்துக்கு பிரதியாக உங்களை அவன் தண்டிப்பானா? இறைவன் அநியாயக்காரனல்லன் என்பதை நீங்கள் நம்பினால் இறைவழிபாட்டுக்குப் பதிலாக கேவலமும் இழிவும் கிடைக்க முடியாது என்பதை நம்பினால், உங்களை நீங்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்வதில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!

அரசின் பதிவேடுகளில் உங்கள் பெயர் முஸ்லிம் என்றுதான் எழுதப்படுகிறது. ஆனால் இறைவனிடத்தில் அரசாங்கப் பதிவேடுகளை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு கிடைக்காது. இறைவன் தன்னுடைய பதிவேடுகளில் உங்கள் பெயர் இறைவனுக்கு வழிபட்டு நடப்பவர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா; இல்லை வழிபட மறுப்பவர்களுக்கு மத்தியில் இடம்பெற்றிருக்கிறதா? என்று அங்கே தேடிப்பாருங்கள்!

இறைவன் உங்களுக்கு அல்குர்ஆனை அருளினான் அதனை ஓதி அறிந்து உங்கள் அதிபதியை உணர்ந்து கொள்வதற்காக; அவனுடைய கட்டளைக்குப் கீழ்படிந்து நடப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. அல்குர்ஆனில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு நீங்கள் எப்போதேனும் முயற்சி செய்ததுண்டா?
இறைவன் தன்னுடைய திருத்தூதரை உங்களிடம் அனுப்பி முஸ்லிமாகத் திகழ்வது எப்படி என்பதை உங்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக. அத்தூதர் என்ன கற்றுக்கொடுத்தார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கு என்றேனும் முயற்சி செய்திருக்கிறீர்களா?

இம்மையிலும் மறுமையிலும் கண்ணியத்தை அடைவதற்கான பாதையை காண்பித்தான். நீங்கள் அந்த பாதையிலா நடக்கிறீர்கள்? இம்மையிலும் மறுமையிலும் தாழ்த்தக்கூடிய செயல்கள் யாவை என்பதை இறைவன் தெள்ளத் தெளிவாகக் கான்பித்தான். அத்தகைய செயல்களை நீங்கள் தவிர்த்துக் கொள்கிறீர்களா? திருகுர்ஆனிலும் நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியிலிருந்தும் நீங்கள் அறிவு பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படியானால் இறைவன் அளிக்கும் நற்கூலிகளை பெற உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? நிராகரிப்பாளன் பெற்றிருப்பது போன்றே அறிவைப் பெற்றிருக்கிற ஒருவன் தன்னைத்தானே முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டால் அவன் பொய் சொல்கிறான் என்பதே பொருள்.

நிராகரிப்பாளன் அல்குர்ஆனை ஓதுவதுமில்லை; அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணர்வதுமில்லை;ஒரு முஸ்லிமுடைய நிலையும் இதுதான் என்றால் அவனை எப்படி முஸ்லிமென்று சொல்லமுடியும்? முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹிவஸல்லம்) அவர்கள் என்ன அறிவுரை கூறினார்கள், இறைவனிடம் அவர்கள் காட்டிய நேரான பாதை எது என்பதை நிராகரிப்பாளன் அறிந்து கொள்ளவில்லை. ஒரு முஸ்லிமும் இதே நிலையில்தான் இருக்கிறான் என்றால் அவன் எப்படி முஸ்லிமாக முடியும்?

நிராகரிப்பாளன் ஹலால் அனுமதிக்கப்பட்டதற்கும் ஹராம் தடுக்கப்பட்டதற்கு மிடையில் வேற்றுமை பார்ப்பதில்லை. எந்தச் செயலில் தனக்கு நன்மையும் இன்பமும் இருக்கின்றனவோ அதனை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். அது இறைவனிடத்தில் அனுமதிக்கப்பட்டாலும் சரி தடுக்கப்பட்டவையாக இருந்தாலும் சரியே! இதே நடத்தை ஒரு முஸ்லிமிடம் காணப்பட்டால் அவனுக்குக் இறை நிராகரிப்பாளனுக்கும் என்ன வித்தியாசம்?

இறை நிராகரிப்பாளனைப் போல் ஒரு முஸ்லிமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவு பெறாதிருந்தால், நிராகரிப்பாளன் செய்வது போன்ற செயல்களை அவனும் செய்தால் அவனுக்கு எப்படி சிறப்பு கிடைக்க முடியும்? மறுமையில் நிராகரிப்பாளன் எப்படி எழுப்பப்படுவானோ அப்படித்தானே இந்த முஸ்லிமும் ஏன் எழுப்பப்படக்கூடாது? நாம் எல்லோரும் அமைதி நிறைந்த உள்ளத்தோடு சிந்திக்க வேண்டிய பிரச்னைகள் இவை.