செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இந்தியாவின் அவலநிலை!

பத்திரப் பதிவு

சொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்:

பலரும் சொத்துகளை வாங்கும்போது, அதை பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்து கொள்கின்றனர். தங்களது சொத்து பத்திரமாக உள்ளதாக கருதுகின்றனர். ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான்,  பதிவு பதிவு செய்தல் அந்த சொத்தை வருவாய் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாக சொந்தமாகும். பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள்கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களை பெற்று, ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும். மனுதாரர், தனது மனுவுடன், ஆவனங்களின் செராக்ஸ் பரிதியை அளித்தால் போதும், எவ்வித கட்டணமும் வேண்டியதில்லை. மூல ஆவணங்களை கொடுக்க வேண்டியதில்லை.
கிராம நிர்வாக அலுவலர், நிர்வாக காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கு கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய் தோறும் பட்டா மாற்றத்துக்கான மனுக்களை பெற வேண்டும். விண்ணப்பித்த தேதியில் இருந்து இரண்டாவது வெள்ளிகிழமையன்று, தாசில்தார் அலுவகத்திற்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும். இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன் முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ சென்று சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைத்த சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கைஎழுத்திட வேண்டும். அன்றைய தினமே அலுவலக கணினியில், மனுவின் விவரத்தை துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.
ஆவணக்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரீசீலீத்து, 2வது வெள்ளிகிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு 15  நாள்களில் பட்டா மாற்றம் செய்யவேண்டும். உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா என்றால் விண்ணப்பித்த தேதியில் இருந்து நான்காவது வெள்ளிகிழமை பட்டா உத்திரவை பெற வேண்டும். இதை பயன்படுத்தி சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் செராக்ஸ் பிரிதிகளுடன் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து விரைவில் பட்டா பெற்று கொள்வதே சிறந்தது..........

நானும் தேசத்துரோகி என்பதில் பெருமைப் படுகிறேன்...!!!

சிந்திக்கவும்: ஆடாதோடை இலையும் அதன் மருத்துவ குணமும்!

சிந்திக்கவும்: ஆடாதோடை இலையும் அதன் மருத்துவ குணமும்!: ஆடாதோடை இதன் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanica ) ஆகும். இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடி...

திங்கள், 27 பிப்ரவரி, 2012

பயணுள்ளத் தகவல்கள்

From பயணுள்ளத் தகவல்கள் payanullathagaval@googlegroups.com
திருச்சி NIT-ல் ஆராய்ச்சி பணி
திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி யின் Centre for Energy & Environmental
Science and Technology துறையில் நடைபெறவுள்ள DST புராஜெக்ட்டில் காலியாக உள்ள JRF மற்றும் புராஜெக்ட்
அசிஸ்டென்ட் பணி இடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1)பணியின் பெயர்: Junior Research Fellow
திட்ட காலம்: 3 ஆண்டுகள்
தகுதி:
கெமிக்கல்/மெக்கானிக்கல்/எனர்ஜி போன்ற பாடத்தில் ME அல்லது M.Tech. முடித்திருக்க வேண்டும்.
CFX நன்று தெரிந்திருக்க வேண்டும்.
2) பணியின் பெயர்: Project Assistant
திட்ட காலம்: 3 ஆண்டுகள்
தகுதி:
இன்ஸ்ட்ரூமென்டேஷன்/கெமிக்கல்/மெக்கானிக்கல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்
தேர்ந்தெடுக்கப்டும் முறை:
நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 1.3.2012.
மேலும் விவரங்களுக்கு lath@nitt.edu என்ற மின்னஞ்சல் முகவரியை காணவும்.
AMET University-ல் வார்டன் பணி
கல்வி நிறுவனத்திற்கு குறைந்தது பட்டப்படிப்புடன் அனுபவம் உள்ள, 35 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் வார்டன்  
பணிக்கு தேவை.
முன்னாள் இராணுவத்தினராக இருப்பது விரும்பத்தக்கது.
அணுக வேண்டிய முகவரி:
AMET University,
135,ECR Road,
kanathur,
Chennai-603 112.
LNT-ல் டெவலப்மெண்ட் ஆஃபீசர் பணி
LNT இயந்திர அமைப்பு நிறுவனத்தில் நவீன தொழில் அமைப்பு திட்டத்தின் விரிவாக்க பணிக்காக
பல்வேறு மாவட்டங்களில் டெவலப்மெண்ட் ஆஃபீசராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி:
10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்திருந்தால் போதுமானது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
LNT Modern Industries,
Post Box No;203,
Trichy-620 003.
டிப்ளமோ படித்தவர்களுக்கு செயில் நிறுவனத்தில் டெக்னீஷியன்(டிரெய்னி) பணி
இந்திய அரசின்கீழ் இயங்கிவரும் செயில் நிறுவனகத்தில் டெக்னீஷியன்(டிரெய்னி) பணிக்களுக்கு டிப்ளமோ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: டெக்னீஷியன் (டிரெய்னி)
காலியிடம்: 72
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், மெட்டலர்ஜி, கெமிக்கல், செராமிக்ஸ், சிவில், எலெக்ட்ரிக்கல் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-க்குள் இருத்தல் மேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 10.03.2012
மேலும் விவரங்கள் அறிய www.sail.shine.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
டிப்ளமோ படித்தவர்களுக்கு டி.ஏ.எம். நிறுவனத்தில் ஜூனியர் என்ஜினீயர் பணி
தில்லி அக்ரிக்லசுரல் மார்க்கெட்டிங் போர்டு நிறுவனகத்தில் ஜூனியர் என்ஜினீரியர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: ஜூனியர் என்ஜினீயர்
கல்வித்தகுதி: சிவில், எலெக்ட்ரிக்கல் துறையில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயதுவரம்பு: 27-க்குள் இருத்தல் மேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி:29.02.2012
மேலும் விவரங்கள் அறிய http://www.delagrimarket.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு பாவினியில் டெக்னிக்கல் அதிகாரி பணி
விளம்பர எண்:01/2012/HR
இந்திய அரசின்கீழ் இயங்கிவரும் கல்பாக்கம் பாரதிய நபிகியா வித்யாட் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அதிகாரி பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: டெக்னிக்கல் அதிகாரி
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், கெமிக்கல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் பாடங்களில் எம்.எஸ்ஸி., பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு:  30-க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி:05.03.2012
துறைவாரியான விவரங்கள் மற்றும் மேலும் பல விவரங்கள் அறிய http://www.bhavivi.co.in/  என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Pharmacist முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் Pharmacist பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Pharmacist
கல்வித்தகுதி:  Pharmacy பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 29.02.2012
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
Health Centre,
Anna University,
Chennai - 25.
மேலும் விவரங்கள் அறிய http://www.annauni.edu/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
மத்திய அரசு பள்ளிகளில் கிளார்க் பணி
மத்திய அரசு பள்ளிக்கான கேந்திரிய வித்யாலயா சங்கதனத்தில்  கிளார்க் பணிகள் உட்பட 377 காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
Principal, Finance officer Administrative Officer பணிகளுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். LDC, Finance Officer பணிகளுக்கு தனித்திறன் தேர்வு நடைபெறும்.
தேர்வு நாள்:22.4.2012.,
விண்ணப்ப கட்டணம்:
 Principal, Finance Officer, Administrative Officer பணிகளுக்கு விண்ணப்ப கட்டணம் Rs 1,200. இதர பணிகளுக்கு Rs 750. SC/ST/EX-SM/PWD பரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மேலும் விபரங்களுக்கு இணையதளத்தை காணவும்.  
விண்ணப்பிக்கும் முறை:
 http://www.kvsangathan.nic.in/ என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள்:14.3.2012.
தபால் துறையில் டிரைவர்பணி
இந்திய தபால் துறையின் கீழ் செயல்படும் மதுரை Mail Motor Service-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
        விளம்பர எண்: DMS/14,50/ChVII&VIII/11-12
        பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள்:12.03.2012
        1.பணியின் பெயர்:  Time Scale Driver
        காலியிடங்கள்    :  4 (UR-3,OBC-1)
        சம்பளவிகிதம்     :  Rs 5200-20200 Grade Pay rs 1900
வயது வரம்பு: 
     01.07.2012 தேதியின் படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடங்களும், அரசு பணியாளர்களுக்கு அரசின் விதிமுறைகளின் படி 35 வயது வரையிலும் தளர்வு வழங்கப்படும்.
தகுதி:
     எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் செல்லுபடியாகும் வகையிலான இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுவதில் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: 
     Rs 50, SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது, விண்ணப்பக் கட்டணத்தை The Inspector General, BSF, Bangalore என்ற பெயரில் பெங்களுரில் மாற்றத்தக்க வகையில் டி.டி./போஸ்டல் ஆர்டராக எடுத்து அனுப்ப வேண்டும்.
       விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
        The Inspector General,
         BSF Bangalore, Yelahanka
         P.O.,Bangalore- 560 064,
         Karnataka.
மேலும் விவரங்களுக்கு http://www.bsf.nic.in/ என்ற இணையதள முகவரியை காணவும்.
பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் டிரெய்னி பணி
இந்திய அரசின்கீழ் இயங்கிவரும் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் டிரெய்னி பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: டிரெய்னி( Plant Operator/ Basic Science/ MillWright/Instrumentation)
காலியிடம்: 36
கல்வித்தகுதி: Plant Operator/ Basic Science பிரிவுக்கு  பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களை கொண்டு படித்திருக்க வேண்டும் மற்றும் MillWright/Instrumentation பிரிவுக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் ஆகிய பாடங்களுடன் Mill Wright Nechanic/Instrumentation பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை: ரூ.6,200
விண்ணப்பங்களை அனுப்ப கடைசித் தேதி: 15.03.2012
மேலும் விவரங்கள் அறிய http://www.barc.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஐடிஐ தகுதிக்கு மெட்டல் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தில் பல்வேறு பணி
 
இந்திய அரசின்கீழ் இயங்கிவரும் மெட்டல் ஸ்டீல் நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Blacksmith/Boiler Attendant/Fitter general/Fitter Boiler/Fitter Instrument/Mechinist/MillWright/Moulder/Masonbrick/Welder/Electrician/ Grinder/Painter.
காலியிடம்: 80
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Blacksmith/Boiler Attendant/Fitter general/Fitter Boiler/Fitter Instrument/Mechinist/MillWright/Moulder/Masonbrick/Welder/Electrician/ Grinder/Painter ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐடிஐயில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 22.02.2012
மேலும் விவரங்கள் அறிய http://www.msf.gov.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

குஜராத் மதக்கலவரம். -மோடி

  எங்க அப்பன் பாட்டன் காலத்திற்கு முந்தையது குஜராத் மதக்வரம். -  

மோடி ஒருத் தொன்மை வாய்ந்த பாரம்பரியமிக்கக் கலாச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிடுவதைப்போல் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தான் ஆட்சி செய்த பொழுது உலகமே காரி உமிழ்ந்த வரலாறு காணாத இனச் சுத்திகரிப்பை திட்டமிட்டு நடத்தப்பட்டப் படுகொலைகளை இதைப் போன்று எங்க அப்பன் பாட்டன் காலத்திற்கு முன்பிருந்தே நடந்து வருகிறது இது குஜராத்துக்கு புதிதல்ல அதனால் இது ஒரு மேட்டரே அல்ல என்று எஸ்.டி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் மோடிக் கூறி இருக்கிறார். 1714 லிருந்து இதுப் போன்ற சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டி இருக்கிறார். 1714 லிருந்தே... இவர் குறிப்பிட்டுள்ள 17ம் நூற்றாண்டு காலம் 1707 வரை காபூலிலிருந்து தென்னிந்தியா வரை மதசார்பற்ற சிறந்த நிர்வாகத்தை ஒளரங்கசேப் நடத்திக் காட்டினார். அதைப்பொறுக்காத மராத்திய மத வெறியர்கள் சதி திட்டம் தீட்டி அவரை தீர்த்துக் கட்டி அவருடன் சேர்த்தே மதசார்பற்ற ஆட்சியையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு 1808 வரை மாறி மாறி மராத்திய மதவெறியர்களே ஆட்சி செய்தனர். 1808ல் கிழக்கிந்திய பிரித்தானிய கம்பெனிகளிடம் இந்தியா வீழ்ந்தப் பின்னர் பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டக் காலத்தில் தேசப்பற்றுள்ள ஹிந்துக்கள் தவிற மதவெறிப்பிடித்த மோடி வகையறாக்கள் அனைவரும் பிரிட்டிஷாரிடம் இரகசியமாகச் சென்று உங்களுடைய எதிரிகளாகிய முகலாயர்கள் எங்களுக்கும் எதிரிகள் என்பதால் நாங்கள் உங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறோம் என்றுக்கூறி முகலாய சக்கரவர்த்திகளை காட்டிக்கொடுத்து அரச பதவிகளை அடைந்து கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்டு அப்போதிருந்தே முஸ்லீம் இனச்சுத்திகரிப்பு வேலையை செய்யத் தொடங்கி விட்டனர். அதைத்தான் இப்பொழுது மோடி சுட்டிக்காட்டுகிறார் என்னைப் போன்ற அவர்களை எல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் பிடிப்பது நியாயமாகுமா ? என்று கேட்கிறார். இந்தியா சுதந்திரமடைந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பொழுது இந்திய தேசத்தை நேசித்து இங்கேயே தங்கிக் கொள்ளும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அப்போதைய பாரதப் பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் முஸ்லீம்கள் இந்தியாவில் தங்கி விட்டனர். இந்திய அரசியல் சாசன சட்டத்திலும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தௌ;ளத் தெளிவாக சட்டம் வரையறுக்கப்பட்டு விட்டதால் அதனடிப்பiயில் ஆட்சி செய்வேன் என்று சத்திய பிரமானம் செய்தே ஆட்சிக்கு வந்தவர் மோடி என்பதால் சுதந்திரத்திற்கு முன் உள்ள நிலையை சுட்டிக்காட்டி தப்பிக்க நினைக்க முடியாது என்று மோடிக்கு பதவி பிரமானம் செய்து வைத்தவர்கள் விளக்க வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகும்... சுதந்திரமடைந்தப் பிறகும் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சட்டம் வரையறுக்கப்பட்டப் பிறகும் இந்தியாவில் பல மாநிலங்களில் எதிர்பாராமலும் அல்லது திட்டமிட்டும் பல கட்டங்களில் மதவெறியர்களால் முஸ்லீம் இனச் சுத்திகரிப்பு நடந்திருக்கின்றன அதில் ஏராளமான உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன அதை மறுப்பதற்கில்லை ஆனால் அப்போதைய ஆட்சியாளர்களால் இவரைப் போன்று ஒரு சாராருக்கு ஆதரவளித்து அவர்களைத் தூண்டிவிட்டு அதற்கு தேவையான உதவிகளும் பரிசுகளும் வெளிப்படையாக வழங்கப்படவில்லை. ஆடத் தெரியாதவள் முற்றத்தை குறை கூறியதைப் போல் தான் இவருடைய பதில்கள் 2002 லிருந்து இதுவரை இருந்து வருவதை நடுநிலையாளர்கள் பார்த்து வருகின்றனர். தேசப்பற்றற்றவர்கள். பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை எப்படி ஆட்சி செய்வது என்ற அடிப்படை அறிவு அறவே இல்லாமலும்> இந்திய தேசத்தின் தொன்மை வாய்ந்த வரலாறு மற்றும் இந்திய அரசியல் சாசன சட்ட விதிமுறைகள் அறவேத் தெரியாமலும் ஆட்சி செய்யப் புறப்படுபவர்கள் தான் மதவெறிப் பிடித்த மோடி வகையறாக்கள் என்பதற்கு மேற்காணும் மோடியின் கூற்று சான்றாக உள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலம் தான் இந்தியாவின் பொற்காலம் என்று சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத்ராஜ் என்பவர் கூறியது அடுத்த சான்று. அதற்கு முந்தைய சான்றுகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. தார்மீக பொறுப்பேற்று... எதிர் பாராத விபத்து ஒன்று நடந்து அதில் சில உயிர்கள் பலியாகி விட்டாலே சம்மந்தப்பட்ட அந்த இலாக்காவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் ( அதற்கு அவர் காரணமாக இல்லை என்றாலும் ) அதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்ததையும் விலகியதையும் பார்த்திருக்கிறோம். 2002ல் நடந்த வரலாறு காணாத முஸ்லீம் இனப்படுகொலைகளை உலகளாவிய ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் வன்மையாக கண்டித்திருக்கின்றன. கலவர வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம் மோடியை 'நவீன நீரோ' என கடுமையாக விமர்சித்திருந்தது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகள்pன் மனித உரிமை அமைப்புகள் கடுமையாக மோடி அரசை விமர்சித்தன. அந்தளவுக்கு கடுமையான கண்டனக் கனைகள் கையாளாகாத மோடியை நோக்கிப் பாயந்தப் பின்னரும் ஒரு வார்த்தைக் கூட இதற்கு பொறுப்பேற்று நான் பதவி விலகுகிறேன் என்று இதுவரை இந்த சொரனைக் கெட்ட ஜென்மம் சொன்னதே கிடையாது. அந்தளவுக்கு பதவி வெறியும்> மத வெறியும் பிடித்த மனித மிருகம் தான் மோடி. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முடிந்த அடுத்த நாள் பந்த்'துக்கு மோடியே சங்பரிவாரங்களை வெளிப்படையாக கூவி அழைத்தது ஒன்றுப் போதும் மோடியை கைது செய்து உள்ளேத் தள்ளுவதற்கு ஆனால் எதற்கும் கையாளாகாத காங்கிரஸ் அரசு இதையும் செய்யாது. ரயில் எரிப்பை கண்டித்து போராட்டக்காரர்கள் கடையடைப்பு அறிவிக்க வேண்டும் அதை அரசு தடுக்க வேண்டும் இது தான் நடைமுறை ஆனால் அரசே முழு அடைப்புக்கு அறிவித்து விட்டு போராட்டக்காரர்களைத் தூண்டுகிறது என்றால் இதுப்போதாதா ? இதற்காக விசாரனை என்றப்பெயரில் ஒருத் தொகையை வீணடித்துக்கொண்டு இருப்பதை இந்திய அரசாங்கம் நிருத்திக் கொண்டு இவரை கைது செய்து அதிரடி நடிவடிக்கை எடுத்து இவரால் மதசார்பற்ற இந்தியாவிற்கு உலக அரங்கில் ஏற்பட்ட கலங்கத்தை> தலைக் குணிவை நிவர்த்தி செய்ய முன் வர வேண்டும். காங்கிரஸ் அரசு முன் வருமா ? வரவே வராது !! பாம்புக்கு வாலும்> மீனுக்குத் தலையும் ஆட்டும் பாவலா காட்டும் ஸ்டைலை காங்கிரஸ் கை விடாது.   


 وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


                                                                                   அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

Tamil Bayan -

நீ சொல் இது நியாயமானதா -

வியாழன், 23 பிப்ரவரி, 2012

இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணம்

                                      வல்லோனின் திருநாமம் போற்றி..

மதங்கள் என்பது இறைநம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தினரும் தத்தமது வேதநூல்களாகக் கருதும் அந்த மத வழிகாட்டிகளை வைத்தே கடவுள் நம்பிக்கையையும், கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும் குறிப்பிட்ட அந்த மதத்தோடு பின்னிப் பினைந்துள்ளனர்.

இஸ்லாம் தவிர்ந்த இதர அனைத்து மதங்களும் பல தெய்வ வழிபாட்டையும், ஏக இறைவனுக்கு இணைகற்பிக்கும் மன்னிக்க முடியா குற்றத்தை தூண்டுவனவாகவே உள்ளன. நாம் இப்படிக் கூறும் போது சிலருக்குக் கோபம் வரலாம். இது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இருந்தாலும் நம்மை சத்தியத்தை விட்டும் தடுத்துக் கொண்டிருக்கும் அந்தக் கோபத்தை சிறிது நேரம் ஓரங்கட்டிவிட்டு நாம் கூறும் கருத்துக்களை சற்று சிந்தித்துப் பாருங்கள் உண்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
எல்லா மதங்களும் கடவுளின் தன்மையைப் பற்றி விளக்கினாலும் போதிய கடவுளின் இலக்கணங்கள், பண்பகள் பற்றி சரியாகக் குறிப்பிடாமைதான் சில மதங்களில் கோடிக்கணக்கான கடவுள் நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் தன்னகத்தே ஏற்படுத்தியுள்ளன. போதாமைக்கு நாளுக்கு நாள் இன்னும் பல கடவுளர்கள் புதிது புதிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தோன்றிக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு தாங்கள் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு வயிறு வளர்ப்பதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம். அதேநேரம் தாம் கடவுளின் அவதாரம் என்று கூறி ஒரு அப்பாவி முஸ்லிமைக் கூட ஏமாற்ற முடிவதில்லை. ஏனென்றால் உடனே கடவுள் எப்படி மனிதரானார்? கடவுள் மனிதனாக மாறினால் கடவுளின் இடத்தில் தற்போது யார் இருக்கிறார்? போன்ற கேள்வியைக் கேட்டு போலித் தனத்தை தோலுறித்துக் காட்டிவிடுவர்.

இஸ்லாத்தின் இறுதி வேத நூலான அல்-குர்ஆன் ஏனைய மதங்கள் விட்டுள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்து இறைவனுக்கு இருக்கவேண்டிய இலக்கணத்தை கச்சிதமாகக் கூறி பல தெய்வ வணக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றது.

இந்த அத்தியாயத்தின் சிறப்பம்சம் என்ன வென்றால், எல்லோருக்கும் புறியும் விதத்தில் அதன் வசனங்கள் உள்ளன. வெரும் நான்கே வசனங்கள். மற்றும் மிக எளிய நடையிலமைந்த சின்னச் சின்ன வசனங்கள் நம்மை வியக்க வைக்கின்றன!.
அது மட்டுமல்ல இப்படி இரத்தினச் சுருக்கமாக ஒருக்காலும் மனிதனால் இறைவனுக்குறிய இலக்கணத்தைக் கூற முடியாது என்பது அல்-குர்ஆன் இறைவாக்கு என்பதற்கான ஒரு சான்றாகும். எனவேதான் அல்-குர்ஆன் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நிச்சயமாக சிந்திப்போருக்கு நிறைய சான்றுகளை பரிசாக வைத்திருக்கின்றது அல்-குர்ஆன்.

(நபியே!) நீர் கூறுவீராக: அவன் – “அல்லாஹ்” ஒருவனே! அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன). அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.
இந்த வசனங்களை ஒரு முறை ஆழ்ந்து கவணிப்போமானால் இந்த தன்மைகளுக்கு உட்பட்டவன் தான் உண்மையான கடவுளாக, வணங்குவதற்குத் தகுதியுள்ளவனாக இருக்க முடியும் என்பதனையும், உண்மையான கடவுளாகிய அல்லாஹ் தவிர்ந்த வணங்கப்படும் அனைத்தும் மதனிதக் கற்பனையில் உதித்த போலிக் கடவுள்கள் என்பதனையும் இலகுவில் புறிந்து கொள்ள முடியும்.இதோ சத்தியத்தைத் தேடி ஒரு சலனமற்ற பயணம் தொடங்குகிறது.
மேற் கூறப்பட்டுள்ள அத்தியாயத்திலுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக அனுகுவோம்.

01. “(நபியே!) நீர் கூறுவீராக,  அவன் – ‘அல்லாஹ்’ ஒருவனே!

“ஒரு விடயத்தை நாம் நன்கு தெறிந்து கொள்ள வேண்டும். அதாவது எல்லா மத்திலும் பல கடவுளர்கள் இருப்பது போல் ‘அல்லாஹ்’ என்பது முஸ்லிம்களின் கடவுள் எனக் கருதுவது தவறாகும். யாரை முஸ்லிம்களாகிய நாம் ‘அல்லாஹ்’ என்று வணங்கி வழிபடுகின்றோம் என்றால், இந்த உலகத்தைப் படைத்து பரிபாலிக்கின்ற வல்ல நாயனான அந்த ஏக சத்தனைத்தான். தவிர ‘அல்லாஹ்’ முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள தனிக் கடவுள் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
இந்த வசனமானது கடவுள் என்பவன் நிச்சயமாக ஒருவனாகத் தான் இருக்க முடியும் என்பதனை அடித்துக் கூறுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை யூகித்துக் கொள்ளலாம். வேற்று மதப் புராணங்களில் கடவுளர்களுக்கிடையில் இடம் பெற்ற சமர்கள், சச்சரவுகள், இழிவான செயல்கள் என்பன எண்ணிலடங்காதவை. ஒரு சாதாரன சிறிய நாட்டைக் கூட ஆழுவதற்கு ஒரே ஒரு ஜனாதிபதி மட்டும் தான் இருக்க வேண்டும் என உலகமே ஏற்றுக் கொண்டுள்ள போது அகிலம் அனைத்தையும் அடக்கியாழ ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சியாளன் இருக்கவே முடியாது என்பதனைத்தான் இந்த வசனம் விளக்குகிறது.

02. “அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன் (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன)”.

இறைவனானவன் அனைத்துத் தேவைகளை விட்டும் அப்பாற் பட்டவன். நம்மைப் போல தேவைகளுடையவன் இறைவனாகவே இருக்க முடியாது. மனிதனுக்கு எது எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அவையனைத்தும் குறைகளே. எனவே இதே குறைகளை இறைவனுக்கும் கற்பிப்பது நாம் இறைவனை குறைத்து மதிப்பிடுகின்றோம் என்பதாக அமைந்துவிடும். அதுமட்டுமல்ல நமது தேவைகளை முறையிடுவதற்காக இறைவனிடம் கையேந்துகின்றோம். அவனே தேவையுள்ளவன் எனும் போது அவனிடம் நாம் எப்படி உதவி கோற முடியும்! பிச்சைக் காரனிடம் பிச்சை கேற்பது போன்றாகி விடும். இந்த இழுக்கை நீக்கும் விதமாகத்தான் அல்லாஹ் தனது திருமறையில் எவ்விதத் தேவையுமற்றவன் என்பது மூலம் தனக்கு மனிதர்கள் ஏற்படுத்திய பலவீத்தை அப்புறப்படுத்துகிறான்.
இறைவனானவன் எள்ளும் பிசகாமல் தன் படைப்பினங்கள் அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருப்பவன். அவனுக்கு நம்மைப்போன்றே ஆசா பாசங்கள் இருந்தால் அவற்றை நிறைவு செய்யும் நேரத்தில் உலகத்தாரின் கோறிக்கைகளை யாரிடம் முறையிடுவது?
எல்லாம் வல்ல நாயனை எவ்விதக் குறைகளும் இன்றி வணங்கி வழிபடுவோமாக!
03. “அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) பெறப்படவுமில்லை”.

இறைவனானவன் தனித்தவன் எனும் பொழுது அவனுக்கு பெற்றோர்களோ அல்லது குழந்தைகளோ இருக்க முடியாது. மனிதன் நினைப்பது போன்று இறைவனுக்கும் குடும்பம், கோத்திரம் இருக்குமானால் இறைவன் சமூகம் என்று ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியொரு சமூகத்தை யாரும் பார்த்ததும் கிடையாது. அதற்கு சாத்தியமும் இல்லை. அல்லது அப்படி ஆரம்பத்தில் இருந்தார்கள் என்று கூறினால் அவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்தோடு மறைத்தது யார்? அல்லது குறிப்பிட்டதோர் காலத்துடன் அனைவரும் இறந்து விட்டார்கள் என்றால், இறைவனுக்கு இறப்பு தகுமா? என்ற கேள்வி நம் சிந்தனையைக் குடைகின்றது. இன்று சிலைகளாக சித்தரிக்கப்பட்டுள்ள கடவுளர்கள் அனைத்தும் கற்பனையில் தோன்றியவைகள் என்பதை நடுநிலையோடு சிந்தித்தால் அவர்களே தெறிந்து கொள்வார்கள்.
கிறிஸ்தவர்கள் கூறுவது போன்று இயேசு இறைமகன் கிடையாது. ஏனன்றால் இறைவன் வாரிசு எனும் தேவையை விட்டும் அப்பாற்பட்டவன். போதாதற்கு பைபிளில் கூட இயேசு தன்னைப்பற்றிய வாக்கு மூலத்தில் தான் இறைவனின் மகன் என்று ஒரு இடத்தில் கூட கூறவில்லை. அப்படி தனது சீடர்களில் ஒருவர் கூட நம்பவுமில்லை. மாறாக பவுலின் கற்பனையில் உதித்த காவியமாகத் தான் இந்த நம்பிக்கையைக் கூற முடியும். அதற்கு பைபிளே சான்றாகவும் உள்ளது.
அடுத்தது கடவுள் மனிதனாக வரவேண்டிய அவசியம் தான் என்ன? முதலாவது கடவுள் மனிதவடிவில் வந்துதான் இவ்வுலக மாந்தருக்கு வழிகாட்ட வேண்டும் என்பது கிடையாது. கடவுள் கடவுளாக இருந்து கொண்டே தனது பனிகளைச் செய்வதுதான் கடவுளுக்குறிய பண்பாகும். உதாரணமாக, ஒரு நாட்டு ஜனாதிபதி தனது சட்டங்களை அமுல்படுத்த சாதாரன தொழிலாளியாக மாறித்தான் தொழிலாளிகள் சட்டங்களைக் கூற வேண்டும் என நினைப்பது தவறாகும்! அவ்வாறு யாராவது நினைத்தால் பைத்தியகாரத்தனம் என்போன். கடவுள் விடயத்தில் மட்டும் ஏன் இந்த நீதமான பார்வை இல்லாமற் போனது?! கவணத்திற் கொள்க!
அடுத்தது கடவுள் மனிதனாக இவ்வுலகிற்கு வந்தால் கடவுளுக்கு இருக்கும் எத்தனையோ பிரத்தியேகத் தன்மைகளை இழக்க வேண்டியேற்படும். இது போன்ற இன்னோரன்ன தத்துவங்களை உள்ளடக்கியதாக இந்த வசம் இடம் பெற்றுள்ளது.
04. “மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை”.
இந்த வசனமானது ஒன்றே இறைவனது தனித்தன்மையை விளக்கப் போதுமானது.  இறைவனுக் ஒப்பாக எதுவுமில்லை என்று அல்-குர்ஆன் மட்டுமல்ல எல்லா மத நூல்களும் கூறிக் கொண்டிருக்கும் போதே எத்தனையோ கடவுளர்களை உண்டாக்கியவன் மனிதன். இறைவனுக்கு யாராவது அல்லது எதாவதொன்று ஒப்பாக இருக்குமானால் தன்னிகரற்ற இறைவன் என்று சொல்ல முடியாது போய்விடும். இவ்வையகத்தில் இறைவனைக் கண்டவன் எவருமில்லை. இப்படியிருக்க யாரும் காணாத, காணமுடியாதவனுக்கு யாரை ஒப்பாக்கி சிலைகளை வடித்தார்கள்? புரியாத புதிர்!!

எனவே சுருக்கமாகக் கூறினால், இந்த நான்கு பண்புகளும் இறைவனின் இலக்கணங்களாகும். உண்மையான இறைவனைத் தேடுபவர்களுக்கு ஒரு(touch stone) உராய் கல்லாக எடுத்துக் கொள்ளலாம்.படைத்தவனை விட்டுவிட்டு நாமேன் படைப்பினங்களை வணங்க வேண்டும்.
இதோ நீங்கள் தேடும் சத்தியப் பாதையில் ஓர் நிகரற்ற தோழனாக இந்த நான்கு வசனங்களும் இருக்கட்டும்..

சனி, 18 பிப்ரவரி, 2012

மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!

ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.
                                                                அல்லாஹ் கூறுகிறான்: -

“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது …” (அல்-குர்ஆன் 2:185)

அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)

ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)

அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்-குர்ஆன் 12:1-2)

இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:2)

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். (அல்-குர்ஆன் 18:1-3)

(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 43:43-44)

முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: -
“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)

“இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக, இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொண்டிருக்கும்போது யார் உயிர் நீத்தார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)

முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
யார் ஒருவர் தன்னுடைய சகோதரனை இந்த உலக ஆசைகளின் துன்பங்களில் இருந்து நீக்குகிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களில் இருந்து நீக்குவான். யார் ஒருவர் இந்த உலகத்தில் ஒரு முஸ்லிமின் குற்றத்தை மறைக்கிறாறோ, அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய குற்றத்தை மறைப்பான்; தன்னுடைய சகோதரனுக்கு பின்னால் இருந்து உதவி செய்யக் கூடியவனுக்கு,  அல்லாஹ் அவரின் பின்னால் இருந்து உதவி செய்வான். அறிவைப் பெறுவதற்காக யார் நடந்து செல்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் அவருடைய பாதையை இலகுவாக்குகிறான்; சொர்க்கத்திற்கான வழியையும் காட்டுகிறான்; யாரெல்லாம் அல்லாஹ்வின் இல்லத்தில் ஒன்று கூடி குர்ஆனை ஓதி, பிறருக்கும் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளும் மலக்குகளும் சுழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் உள்ளவர்களிடம் அவர்களைப்பற்றி சிலாகித்துக் கூறுவான். (திர்மிதி)

முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
இரவில் ஒரு மணி நேரம் மார்க்க அறிவைப் பெறுவதற்காக வெளியே செல்வது முழு இரவிலும் நின்று வணங்கி செலவழிப்பதை விட சிறந்தது. (திர்மிதி)
இறை இல்லத்தில் இரண்டு கூட்டங்களின் பக்கம் (நபி {ஸல்}) சென்றார்கள்; இரண்டு வகுப்பினரும் சிறந்தவர்கள் என்றாலும், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரைவிட சிறந்தவர். ஒரு வகுப்பினர் அல்லாஹ்விடம் துவா கேட்டுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் நாடினால் அவர்கள் கேட்டதை அவர்களுக்கு வழங்குவான் அல்லது தாமதப்படுத்துவான்; மார்க்கத்தைப் புரிந்து கொள்வதற்காக மார்க்க அறிவைப் பெற முயற்சித்து அதை அறியாதவர்களுக்கும் கற்பித்துக் கொண்டும் அந்த இரண்டாம் வகுப்பினரே சிறந்தவர். நிச்சயமாக நான் ஒரு கற்றுக் கொடுப்பவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்” என்று சொல்லி அவர்களிடையே அமர்ந்து விட்டார்கள்.
இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெறுவது ஒவ்வொரு பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் ஒரு மனதாக குரல் கொடுக்கின்றனர்.
ஒரு சில மக்கள் தான், மார்க்க அறிவைப் பெருவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக, வெட்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை சொல்லி தங்களுடைய செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.
மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் முயற்சிக்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.