சனி, 31 மார்ச், 2012

பல வியாதிகளை குணப்படுத்​தும் தண்ணீர்

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
ஆனால் இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள்.
அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கும் , வேறு தொழில்களுக்கும் செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேநீர் அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்று நாம் எல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.

நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம் உடலினுள் புகும் நோய் கிருமிகளை அழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்பு சுரப்பிகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரை விட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும் போது உடலினுள் சென்று பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும் அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில் நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச் செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது.
மருத்துவமுறை:

1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4x160மிலி டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ள கூடாது.
3. 45 நிமிடங்களுக்கு பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் பொது 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்தி பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாள்கள இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:

*  உயர் ரத்த அழுத்தம் - 30 நாட்கள்
*  வாய்வு கோளாறுகள் - 10 நாட்கள்
*  சர்க்கரை வியாதி - 30 நாட்கள்
*  புற்று நோய் - 180 நாட்கள்
*  காசநோய் - 90 நாட்கள்

பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.

"நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக அமையலாம்.நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்...

ஜில் ஜில் கூல் வாட்டர் வேண்டாமே:

இப்போதெல்லாம் கிராமத்திலும், நகரபுறங்களிலும் பிரிட்ஜ் பயன்படுதுத்வோர் எண்ணிக்கை அதிமாகிவிட்டது. அதனால் குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி இரவு உணவானாலும் சரி இந்த குளிர்ச்சியான தண்ணீர் தான் பலரது தாகத்தை தணிக்கிறது.

இது மிகவும் ஆபத்தான செயல் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அவர்கள் தரும் விளக்கம் இதுதான் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட உணவில் உள்ள எண்ணெய் துகள்களை கெட்டியாகி விடுகிறது.

இதனால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகிவிடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்னை வரலாம். என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.
இதய நோயாளிகள் சாப்பிடும் போது கூல் வாட்டரை தொடவே கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உன்மைதான? என்பதை நீங்கள் ஆய்வுசெய்து நிருபித்து கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து பிரிட்ஜ்ல் வைத்து விடுங்கள்.சில மணி நேரம் கழித்து அதை எடுத்து பாருங்கள் அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போல் தோன்றும். ஆனால் அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்.

உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும். சாப்பிட்டு முடிந்ததும் நம் உடலுக்குள் ஜூஸ் வாட்டர் சென்றால் எண்ணெய் துகள்கள் இது போன்று தான் மாறி சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றன....

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.    இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில் 
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் 

விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.

சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.

கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.

ஷரத்து: பிரிவு.

இலாகா: துறை.

கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.

வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

புல எண்: நில அளவை எண்.

இறங்குரிமை: வாரிசுரிமை.

தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.

நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்....
 
 
                                              நன்றி;உழவன்

வெள்ளி, 30 மார்ச், 2012

அல் குர்ஆனின் வழியில் அறிவியல்…


அல் குர்ஆனின் வழியில் அறிவியல்


இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து,
இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளா இருந்தனர். இவர்கள் எவ்வளவு பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாக (பூமியை) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  அல்குர்ஆன். 30:9

இவ்வசனமானது  1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு மக்களை நோக்கி இறங்கியது என்றாலும் இன்றுள்ள நமக்கும் சொல்லப்பட்ட செய்திதான். குறிப்பாக அல்லாஹ் நம்மிடம் கூருவது, “உங்களை நீங்களே பலசாலிகளாக நினைத்துக்கொள்ளாதீர்கள், நிலத்தை பண்படுத்தி விவசாயம் அதிகளவில் செய்வது நீங்கள் மட்டும்தான் என்று எண்ணாதீர்கள். உங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் உங்களை விட பலசாலிகளாகவும், பூமியில் அதிகளவில் விவசாயம் செய்தவர்கள்.”

இது உண்மைதான், இன்றைய தொழில்நுட்ப அறிவு, மின்சாரம் எதுவும் இன்றி, தன உடல் பலத்தைக்கொண்டு பெரும் கட்டிடங்களையும், பிரமிடு போன்ற அதிசயங்களையும், மலைகளை குடைந்து மாளிகைகளையும் கட்டியவர்கள் முன்னோர்கள். அல்குர்ஆன்-26:128,129 – 26:149

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்கள் அந்த நாட்டில் தான் வாழும் சூழலை ஒட்டிய நிலப்பரபிலேயே விவசாயம் செய்வார்கள். உதாரணமாக, காவேரி டெல்டா பகுதியில் பாசனம் செய்யும் தஞ்சை விவசாயி வட நாட்டிற்கு சென்று கங்கை டெல்டா பகுதியில் விவசாயம் செய்வதில்லை, அவர்கள் சார்ந்த ஊர்களை ஒட்டியே உள்ள விளைநிலங்களில் மட்டும் பயிறிடுவார்கள். இது தான் எங்கும் உள்ள நிலை
.
உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அவ்வப்போது அனுப்பியுள்ளான். பல்வேறு கால கட்டங்களில் அவர்கள் வந்து நேர்வழி காட்டினர். குறிப்பாக யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் என மூன்று மார்க்கங்களில் குறிப்பிடப்படும் பெரும்பாலான அறியப்பட்ட நபிமார்கள் அனைவரும், மத்திய கிழக்கு நாடுகளான  சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக், அரேபியா போன்ற இடங்களில் வாழ்ந்த மக்களிடையே சத்தியத்தை எடுத்துரைத்தனர். இந்த நபிமார்களை பொய்ப்பித்து தங்களுக்கு தாங்களே அநியாயம் செய்த மக்களை பற்றியே அல்லாஹ் இவ்வசனத்தில் (அல்குர்ஆன் 30:9) கூறுகிறான்.

இன்னும் (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட) அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அவர்களிடம் வந்தனர். ஆகவே அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு அநியாயம் செய்வதற்காக இருக்கவில்லை; எனினும் அவர்கள்(அந்நபிமார்களை
பொய்யாக்கி) தங்களுக்கு தாமே அநியாயம் செய்து கொண்டனர். – அல்குர்ஆன்-30:9

நபி(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் குறிப்பாக சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் வாழ்ந்த அரேபியர்கள்தான் உலகில் அதிகமான பரப்பளவில் நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்ததாக அல்லாஹ் கூறுகிறான். எப்படி என பார்ப்போம்.?

ஐரோப்பா கண்டத்தின் அன்றைய நிலை
சுமார் 8 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, ஐரோப்பாவில் வாழ்ந்த பூர்வகுடி ஐரோப்பியர்கள், காட்டு மிருகங்களை வேட்டையாடி உண்ணும் நாடோடிகளாக (Hunter &Gatherer) வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியப் பயிர், விவசாய விளைபொருள் உற்பத்தி முறை தெரிந்திருக்கவில்லை. மிருகங்களை வேட்டையாடி மிருகங்கள் போல் வாழ்ந்து வந்தனர். ஆனால் 7500 வருடங்களில் அதாவது 500 வருடங்களில் வேளாண் உற்பத்தி முறை அறிந்து பயிர்த்தொழில் சாகுபடி செய்து விவசாயிகளாக மாறிய நிகழ்ச்சி, மானிட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

விலங்கோடு விலங்காக வாழ்ந்த ஐரோப்பியர்கள் எப்படி விவசாயத்தை அறிந்தனர். ஒரு 500 வருடங்களுக்கு முன்பு பசுமைப்புரட்சி ஏற்பட காரணம் என்ன? விவசாயத்தை கற்றுக்கொடுத்தவர்கள் யார்? என்ற கேள்வி அறிஞர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் நீடித்து வந்தது. இன்றைய நவீன (GENETIC) மரபியல் சோதனை முடிவுகள் இக்கேள்விகளுக்கு உரிய பதிலை சமீபத்தில் வெளிப்படுத்தின.
ஆஸ்திரேலியா அடிலெய்டு பல்கலைக்கழகமும் மற்றும் (Australian Centre for Ancient DNA-ACAD) ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் எஸ்தோனியா நாட்டு ஆய்வாளர்கள் குழு ஒன்றிணைந்து ஜெர்மனி, ஹங்கேரி, இங்கிலாந்து நாட்டிலுள்ள பழம்பெரும் புதைகுழிகளை கல்லறைகளை ஆராய்தனர். அங்கு அடக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகளை சோதித்து அதன் DNA மூலக்கூறுகளை பிரித்தெடுத்தனர்.

இதே போல, இன்றுள்ள ஐரோப்பியர்களின் DNA மூலக்கூறுகளையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவுகள் வியப்பளிப்பதாக இருந்தது. ஏனெனில் சுமார் 7100 ஆண்டுகளுக்கு முன் இறந்த புராதன புதை குழிகளிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகளின் DNA மூலக்கூறு, இன்றைய ஐரோப்பியர்களின் DNA மூலக்கூறுடன் ஒத்துப்போகவில்லை. இருவரும் வேறு வேறு இனம் என்று DNA அடையாளம் காட்டியது. குறிப்பாக ஐரோப்பாவில் பல பாகங்களில் சுமார் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பழம் புதை குழி எலும்புகள் DNA பூர்வீக ஐரோப்பியர்களின் DNA உடன் பொருந்தவில்லை.

ஜெர்மனியின் பெர்லின் நகரிலிருந்து சுமார் 100 மைல் தொலைவில் உள்ள டிரன்பர்க் என்ற கிராமத்தில் இருந்த பழமை வாய்ந்த புதைகுழியிலிருந்து 22 எலும்புக்கூட்டை ஆராய்ந்தனர். இந்த எலும்புகளின் DNA எல்லாம் மைட்டோ காண்ரியல் (Y குரோமோஸோம் HAPLOTYPE) வகையாக இருந்தது. இந்த YY குரோமோஸோம்கள், பூர்வ குடி ஐரோப்பியர்களிடம் மிக அரிதாகவே இருந்தது. தற்போது ஐரோப்பா முழுவதும் வசிக்கும் 36 பிரதேச மக்களின் DNA க்களுடன் புராதன எலும்புகளின் DNA க்கள் ஒத்துப்போகவில்லை. இது மட்டும் அல்லாமல், இந்த எலும்புகளில் இருந்த ஸ்டிரோசியம், கால்சியம் விகிதாச்சாரமும் வேறுபட்டு இருந்தது.

பொதுவாக ஸ்டிரோசியம் ( Sr) என்ற தனிமம் Element நமது எலும்பில் உள்ளடங்கி உள்ளது. நீரில் உள்ள Sr ‘Sr’ ஆனது நாம் நீர் உட்கொள்ளும்போது உடம்பில் உள்ள எலும்பில் படிந்து விடும். இதுபோல் நீரருந்தும் விலங்குகள் தாவரங்களிலும் இந்த ஸ்டிரோசியம் படிவதுண்டு. தாவரங்களை உண்ணும ஆடு, மாடு போன்ற கால்நடைகளிலும் ஸ்டிரோசியம் படியும். ஆனால் கால்நடைகளின் கழிவில் பெரும்பாலான ஸ்டிரோசியம் வெளியேறிவிடும். எனவே இந்த விலங்குகளை வேட்டையாடி உண்ணும பழக்கமுள்ள ஐரோப்பிய பூர்வகுடி மனிதர்களின் எலும்புகளில் இந்த ஸ்டிரோசியத்தின் அளவு மிகக்குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் அதே சமயம் ஐரோப்பா முழுவதும் 16 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புராதன புதைகுழி எலும்புகளில் இந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரம் மிக அதிக அளவில் இருந்தது. காரணம் இம்மக்களது உணவுப்பழக்கம் தானியங்களாக இருந்ததுதான். ஆகவே இவர்கள் தான் ஐரோப்பாவிற்கு முதன் முதலில் விவசாயத்தை அறிமுகப்படுத்தியவர்கள் என்று அறிஞர்கள் உறுதிப்படுத்தினர்.
ஐரோப்பிய உள்ளூர் மக்களிடம் குறைவாக இருந்த ஸ்டிரோசியம் / கால்சியம் விகிதாச்சாரமும், Y குரோமஸோம்ஸ் DNA ( YY CHROMOSOMES HAPLOTYPE) மாதிரிகளும் பூர்வ புதைகுழி எலும்புகளின் மாதிரியுடன் ஒத்துபோகாமல் புதிய இனமாக அடையாளம் காட்டியது. யார் இவர்கள்? எங்கிருந்து வந்தனர் என்பதை ஆராய்வதற்காக, உலகம் முழுவதும் உள்ள மக்களின் DNA க்களை ஆய்வு செய்தனர்.(Genographic Consortium) என்ற அமைப்பின் மூலம் உலக மக்களின் DNA DNA க்களை ஆராய்தனர்
.
நமது இந்திய மக்களின் DNA  பிரிவை, மதுரை காமராஜ் பல்கலை கழகம் ஆய்வு செய்தது.

இறுதியில் ஐரோப்பாவில் விவசாயம் செய்த முதல் விவசாயியின் DNA மாதிரிகளின் தொடர்ச்சி பிரான்ஸ், ஹங்கேரி, துருக்கி, சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், ஈரான், ஈராக்கில் முடிந்தது. ஐரோப்பாவிற்கு விவசாயத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் மத்திய கிழக்கு அரபு மக்களே என்று அறிவியல் உலகம் ஒப்புகொண்டது.
நாடோடி ஐரோப்பியர்களுக்கு பயிர் செய்யும் முறையை கற்றுக்கொடுத்து, சமூக பொருளாதார, அறிவியல் வளர்ச்சிக்கு மாபெரும் பங்களிப்பை மத்திய கிழக்கு அரேபியர்களே செய்துள்ளனர் என்பதை நவீன அறிவியல் ஆய்வு நீறுபித்துள்ளது.

“நிராகரிப்பவர்களை சிதறடித்துப் பிரித்துவிட்டோம்”!

மத்திய கிழக்கில் வாழ்ந்த அரேபியர்கள் ஐரோப்பாவிற்கு செல்ல காரணம் என்ன?

மக்கள் இடப்பெயர்சிக்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கான காரணங்களை அல்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். உதாரணமாக, தோப்புவாசிகளைப்பற்றிக் கூறும்போது நல்ல முறையில் விவசாயம் செய்த மக்கள், அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணித்ததன் காரணமாக ‘ம ஆரிப்’ எனும் அணையை உடைக்கக்கூடிய பெரு வெள்ளத்தை அனுப்பி அங்கு வேளாண்மை செய்ய முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு சோதிக்கப்பட்டதாக அல்குர்ஆன் 34:15,16  கூறுகிறது. இவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை தேடி இடம் பெயர்ந்திருக்கலாம்.

மேலும்
நிராகரிப்பவர்களை சிதரடித்ததற்கு காரணம், “இன்னும், அவர்களுக்கிடையேயும், நாம் பரக்கத் (அருள்) செய்திருந்த ஊர்களுக்கிடையேயும் வெளிப்படையாகத் தென்படக்கூடிய பல ஊர்களையும்  ஆக்கி, அவைகளில் பிரயாணத்தை நாம் அமைத்தோம்”.
“இரவுகளிலும், பகல்களிலும் அவற்றில் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள் (என்று கூறினோம்)”

“ஆனால் அவர்கள், எங்கள் இரட்சகனே! எங்கள் யாத்திரைகளை நெடுந்தூரமாகும்படி செய்வாயாக! என்று கூறி தமக்கு தாமே அநியாயம் செய்து கொண்டனர்; ஆகவே அவர்களை செய்திகளாக்கிவிட்டோம், இன்னும் அவர்களை பல ஊர்களில் சிதறடித்துப்(பிரித்து) விட்டோம்.” அல்குர்ஆன் 34:19
அல்லாஹ்வின் கட்டளையைப் புறக்கணித்ததன் காரணமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட மத்திய கிழக்கு அரேபியர்கள், தங்கள் வாழ்வாதாரங்களை தேடியும், தாங்கள் விரும்பியபடியும் நெடுந்தூர பயணத்தை தொடங்கினர். சிரியா, துருக்கி, பல்கேரியா, செர்பியா, ஆஸ்திரியா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பறந்த பயணத்தை மேற்கொண்டனர். தானிய விதைகளை தங்களுடன் கொண்டு சென்று நதிக்கரையோரம் விவசாயம் செய்தனர். குறுகிய 500 வருடங்களுக்குள் முழு ஐரோப்பாவிலும் விவசாயம் பெருந்தொழிலாக மாறியது.

ஆறாம் நூற்றாண்டில் இருண்ட கண்டமாக இருந்த ஐரோப்பாவில், முழு அறிவியல் புரட்சி ஏற்பட அடித்தளமாக இருந்தவர்கள் அரபு முஸ்லிம்கள், என்று சரித்திரம் சான்று பகர்வதை அனைவரும் அறிவோம். அறிவியல் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட அரேபியர்களே 8000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பசுமை புரட்சிக்கும் விதையிட்டவர்கள் என்ற உண்மையை இன்றைய அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டது. இன்று அறிஞர்கள் ஏற்றுக்கொண்ட உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பு அல்குர்ஆனில் அல்லாஹ் கூறிவிட்டான்
.
“இவர்கள் எவ்வளவு பூமியைப் பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாகப் (ஐரோப்பா முழுவதும்) பண்படுத்தி அபிவிருத்தiசெய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.” அல்குர்ஆன் 30:9

அரேபியர்கள் எந்தளவு விவசாயத்தில் ஆர்வம உடையவர்கள் என்றால், சொர்க்கம் சென்றாலும் கூட, அங்கும் விவசாயம் செய்ய விரும்புவார்கள் என்பதை நபிமொழி நன்கு உணர்த்துகிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்

“சுவனவாசிகளில் உள்ள ஒருவர், ‘என் இறைவனே! நான் விவசாயம் செய்ய விரும்புகிறேன்,’ என்று கேட்பார். அதற்கு அல்லாஹ்,  ‘நீ விரும்பிய இன்பமெல்லாம் இங்கு கிடைக்கவில்லையா’? என்று கேட்பான். “எல்லாம் கிடைக்கிறது ஆனாலும் என் மனம் விரும்புகிறது” என்று அவர் கூறுவார். அல்லாஹ் அனுமதி கொடுத்தவுடன் விதையை போடுவார், அது உடனடியாக பயிராக வளர்ந்து தயாராகிவிடும். அல்லாஹ் கூறுவான், “ஆதமுடைய மகனே! எடுத்துக்கொள்! எதிலும் நீ திருப்தியடையமாட்டாய்!”
இதைக் கேட்ட ஒரு நபித்தோழர் கூறுவார் “அந்த சுவனவாசி
குறைஷிகளில்
ஒருவராகத்தான் இருப்பார்! நபி(ஸல்) அவர்கள் உடனே புன்முறுவல் செய்தார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரீ

S.ஹலரத் அலி,

                                                                                   அறிவியல் ஆதாரம் : www.plosbiology.org

ஜித்தா.

மீன் பிரியாணி!


தேவையான பொருட்கள்:
மீன் – 1 கிலோ
அரிசி – 4 கப்
பிரியாணி மசாலா -1  பாக்கட்
வெங்காயம் – 3
தக்காலி – 3
இஞ்சி & பூண்டு பேஸ்ட் – 2ஸ்பூன்
தயிர் – 1 கப் 200 கிராம்
மஞ்சள் கலர் பொடி
பால் – 1/4 கப்
மல்லி & பொதினா பொடியாக கட் பன்னி கொள்ளவும்
ஆயில், நெய், உப்பு தேவையான அளவு

(A) வறுக்க தேவையான பொருட்கள்:

நெய்
முந்திரி
திராட்சை
வெங்காயம் பெரியது 1 நீள வாக்கில் மெல்லியதாக கட் பண்ணவும்

(B) மீன் வறுக்க தேவையான பொருட்கள்:

ஆயில்
சிக்கன் 65 மசாலா 1 பாக்கட்
எ பழம் 1/2 மூடி
இஞ்சி & பூண்டு பேஸ்ட் – 1ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

(C) சாதம் வடிக்க தேவையான பொருட்கள்:

பட்டை
கிராம்
ஏலக்காய்
லெமன் சாறு 1 ஸ்பூன்
பட்டர் அல்லது நெய் 1ஸ்பூன்
செய்முறை:

(A) வறுக்க கொடுத்திருக்கும் பொருட்களை வறுத்தெடுக்கும் முறை:

அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி சூடு வந்ததும் வறுக்க கொடுத்திருக்கும் பொருட்களை தனி தனியாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். (Refer items “A” above)

(B) மீன் வறுத்தெடுக்கும் முறை:

முதலில் மீனை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். அத்துடன் மீன் வறுவலுக்கு தேவையான பொருட்களில் ஆயிலை தவிற மற்றவை அனைத்தயும் போட்டு புரட்டி குறைந்தது 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு ஒரு காப்பர் பாட்டம் சட்டியை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி சூடு வந்ததும் பிரட்டி வைத்திருக்கும் மீனை ஒவ்வொரு துண்டாக போட்டு 3/4 பதத்திற்கு பொறித்து தனியே எடுத்து வைக்கவும்.

(C) பிரியாணி செய்யும் முறை:

வெங்காயம் தக்காலியை கட் பண்ணி வைத்து கொள்ளவும்.
அடுத்து பிரியாணி சமைக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொஞ்சமாக ஆயில் ஊற்றி 3 ஸ்பூன் நெய் போட்டு சூடு வந்ததும் வெங்காயத்தை போடவும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காலியை போட்டு வதக்க வேண்டும். இரண்டும் நன்கு வதங்கியதும் இஞ்சி & பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாடை போகும் வரை கிளரி அத்துடன் பிரியாணி மசாலாவை சேர்த்து 1 நிமிடம் வதக்கி விட்டு பிறகு தயிர் சேர்க்க வேண்டும். அனைத்தும் ஒன்றாக கலந்து கிரேவி பதத்திற்கு வந்து விடும். (ட்ரையாக இருந்தால் தயிர் கப்பை அலசி 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்).

பிறகு கிரேவிக்கு தேவையான உப்பு மட்டும் போடவும். (சில பிரியாணி மசாலாவில் உப்பு கலந்திருக்கும். உப்பு போடுவதற்கு முன் செக் பன்னி கொள்ளவும்.) கிரேவி ஒன்றாக கலந்து வரும்போது அதில் பொறித்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை பரப்பி சட்டியை மூடி அடுப்பை குறைத்து கிரேவியில் உள்ள எண்ணை பிரிந்து வரும் வரை தம் போடவும்.
மற்றொரு பாத்திரத்தில் சாதம் வடிக்க தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் பட்டை, கிராம், ஏலம், லெமன் சாறு, பட்டர் சாதத்திற்கு தேவையான உப்பு மட்டும். சேர்த்து அடுப்பில் வைத்து கொதி வந்ததும் அரிசியை கலைந்து போட்டு 3/4  பதம் வந்ததும் வடித்து வைத்து கொள்ளவும்.
அடுத்து கிரேவி தயாரானவுடன் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் கிரேவியோடு மீன் துண்டுகளை எடுத்து வைத்து கொள்ளவும். மீதமிருக்கும் கிரேவியில் வடித்து வைத்திருக்கும் சாதத்தில் பாதியை போட்டு அதன் மேல் பாதி மீன் துண்டுகளை பரப்பி அதற்கு மேல் மல்லி & பொதினா, வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை, வெங்காயம் என்று கொஞ்சம் கொஞ்சம் மாக தூவ வேண்டும்.

அதற்கு மேல் மீதி சாதத்தை கொட்டி மீதி இருக்கும் மீன் துண்டுகளை பரப்பி மேலே கூறியிருப்பது போல் மல்லி & பொதினா வறுத்த சாமான் அனைத்தையும் சேர்த்து அத்துடன் 1/4 டம்ளர் பாலுடன் கலர் பொடி கலந்து பிரியாணி மேல் தெளிக்க வேண்டும். மீன் வறுத்த எண்ணை, முந்திரி வறுத்த நெய் மீதமிருந்தால் அதையும் பிரியாணி மேல் ஊற்றி சட்டியை மூடி அடுப்பை நன்றாக குறைத்து 1/2 மணி நேரம் தம் போடவும். ( இடையில் திறந்து கிளற கூடாது).
பிரியாணி ரெடியான பிறகு மீன் துண்டுகள் உடையாமல் கிளற வேண்டும். தெரியாதவர்கள் ஒரு பாத்திரத்தில் மீன்களை எடுத்து வைத்து விட்டு சாதத்தை கிளறி விட்டு பிறகு பரிமாறவும்
.
குறிப்பு:
1) மீன் மண்டையில் உள்ள சிலாம்பை நீக்க முடியா விட்டால் தோலோடு எடுத்து விடவும். பொதுவாக மீன் மண்டையை பிரியாணியில் சேர்க்க மாட்டார்கள். இந்த பிரியாணியில் மீன்களை பாதி வறுத்தும் மீதி கிரேவியில் வேகவைப்பதால் மண்டையிலுள்ள கொழுப்பு பகுதி சாப்பிட சுவையாக இருக்கும். பிடிக்காதவர்கள் தவிர்த்து கொள்ளவும்.

2) மீன் வறுத்த எண்ணை அதிகமாக இருந்தால் பிரியாணி தாளிக்கும் போதே சேர்த்து கொள்ளலாம்.

3) மீன் பிரியாணி மசாலா கிடைக்க வில்லையென்றால் சிக்கன் & மட்டன் பிரியாணி மசாலாவை உபயோகிக்கலாம்.

4)  மீன் வறுவலுக்கு குறிப்பாக சிக்கன் 65 மசாலா சேர்பதன் காரணம், மீன்களை முதலில் பாதி அளவு வறுத்து மீதி கிரேவியில் வேகவைக்க வேண்டும். பெரிய துண்டுகளாக இருப்பதால் வறுக்கும் போது உடைந்து விடும். சிக்கன் 65 மசாலா சேர்பதால் மீன்கள் அதிக அளவில் உடையாது.
5) மீன் வறுவலுக்கு காப்பர் பாட்டம் சட்டியை உபயோகிக்க காரணம் மீன் வறுக்கும் போது அடியில் தங்கும் கசடுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த முடியும். மற்ற பாத்திரமாக இருந்தால் கசடுகள் நீக்க முடியாமல் மீன்கள் ஒட்டி உடைய வாய்புள்ளது

புதன், 28 மார்ச், 2012

பகுத்தறிவு என்றால் என்ன?

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள். மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.
அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.
முதலில் இந்த பகுத்தறிவு என்றால் என்ன? என்பதை ஆய்வு செய்துவிட்டுப் பின்னர் விசயத்திற்கு வருவோம். இதர பிராணிகளுக்க இருப்பது போல் பார்த்து அறிவது, கேட்டு அறிவது, முகர்ந்து அறிவது, ருசித்து அறிவது, தொட்டு அறிவது என இந்த ஐயறிவுகளும் (ஐம்புலன்களும்) மனிதனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஐயறிவு துணையுடன் ஆய்ந்தறியும் திறனான பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இற்த பகுத்தறிவு மேலே குறிப்பிட்டுள்ள ஐயறிவுகளின் உதவி கொண்டு மட்டுமே செயல் படமுடியும். இந்த ஐயறிவுகள் வராத – கட்டுப்படாத பல பேருண்மைகளை மறுக்கும் நிலையில் பகுத்தறிவாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் இருக்கின்றனர். அந்த பேருண்மைகளை பின்னர் ஆய்வுக்கு எடுப்போம்.
இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பகுத்தறிவாளர்கள் சொல்வது போல் மனித வாழ்க்கை அற்பமான இவ்வுலகோடு முற்றுப் பெறுவதாக இருந்தால், அப்படிப்பட்ட மனிதப் பிராணிக்கு பகுத்தறிவு தேவையா? என்பது தான். இன்று உலகில் கோடானுகோடி ஐயறிவு பிராணிகளைப் பார்க்கிறோம். அவை ஆறறிவு மனிதனை விட மிகமிக மகிழ்ச்சியாக, சந்தோசமாக, களிப்புடன் வாழ்ந்து வருகின்றன. விரும்பியதை விரும்பிய அளவு உண்டு மகிழ்கின்றன. குடித்து மகிழ்கின்றன. தங்களின் ஜோடிகளோடு இணைந்து சந்ததிகளை தாராளமாகப் பல்கிப் பெருகச் செய்கின்றன. அவற்றிற்கு ஏதாவது இடையூறுகள் வருவதாக இருந்தால் அவை ஆறறிவு படைத்த மனிதனால் மட்டுமே ஏற்படுவதேயாகும். மற்றபடி அவற்றிற்கு கட்டுப்பாடோ விதிமுறைகளோ எதுவுமே இல்லை.
மானத்தை மறைப்பதற்கென்று அவற்றிற்கு விதவிதமான ஆடைகள் தேவையில்லை. ஒண்ட வீடுகள் தேவையில்லை. இன்ன ஆணுடன் தான் இணைய வேண்டும்; இன்ன பெண்ணுடன் தான் இணைய வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை; அப்படி மாறி மாறி இணைவதால் எய்ட்ஸ் என்ற ஆட்கொல்லி நோயும் அவற்றிற்கு ஏற்படுவதில்லை. இன்னாருடைய மகன் இன்னார் என்ற வாரிசுப் பிரச்சினையும் இல்லை. உண்டு, பழித்து, ஜோடியுடன் கலந்து அனுபவித்து, மாண்டு மண்ணோடு மண்ணாகப் போகும் நிலை. நாளைக்கு நமது நிலை என்ன? சாப்பாட்டு பிரச்சினை என்ன? மனைவிப் பிரச்சினை என்ன? மக்கள் பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினை என்ன? இந்தப் பிரச்சினை என்ன? என பல்வேறு பிரச்சினைகளால் அல்லும் பகலும் அவதியுற்று அல்லல்படும் நிலை ஐயறிவு பிராணிகளுக்கு இல்லை. ஆறறிவு மனிதப் பிராணியை விட ஐயறிவு பிராணிகள் மகிழ்ச்சிகரமாக, எவ்வித கெளரவ பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து மடிகின்றன என்பதை பகுத்தறிவாளார்கள் மறுக்க முடியுமா?
சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிராதயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைகள் , குண்டு கலாச்சாரம் இவற்றில் எதனையும் ஐயறிவு பிராணிகளிடையே பார்க்க முடிகிறதா? இல்லையே! நாளை நடப்பதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து மடிகின்றன. சொத்து, சுகங்களையோ, உணவு வகைகளையோ அவை சேர்த்து வைக்காவிட்டாலும் அதனால் அவை துன்பப்பட்டதுண்டா? உணவில்லாமல் பட்டினியால் மடிந்ததுண்டா?
பகுத்தறிவாளர்களே! சிறிது உங்களின் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்திப் பாருங்கள். இவ்வுலகோடு மனித வாழ்க்கை முற்றுப் பெறுவதாக இருந்தால், மனிதனுக்கும் மற்ற ஐயறிவு பிராணிகள் போல் பகுத்தறிவு கொடுக்கப்படாமல் இருந்தால், மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக, மகிழ்ச்சிகரமாக, கவலையோ, துக்கமோ இல்லாமல், சூழ்ச்சிகள், சதிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள், மூடக் கொள்கைகள், வன்முறைச் செயல்கள், வெடிகுண்டு, அணுகுண்டு கலாச்சாரங்கள், தற்கொலைப்படைத் தாக்குதல்கள் இவை எவையுமே இல்லாமல் மிக, மிக நிம்மதியாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகலாம். அப்படியானால் ஐயறிவு மிருகங்களுக்குக் கொடுக்கப்படாத இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையே இல்லாத பிரத்தியேக பகுத்தறிவு மனிதனுக்கு மட்டும் ஏன் கொடுக்கப்ட்டுள்ளது? முறையாக நடுநிலையோடு உங்களின் பகுத்தறிவை சரியாகப் பயன்படுத்தினால், இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கை – பரீட்சை வாழ்க்கை என்பதை உங்களாலும் புரிந்து கொள்ள முடியும்.
இன்று அனைத்து நாடுகளிலும் நீக்கமறக் காணப்படும் இனவெறி, மதவெறி, மொழி வெறி, ஜாதி வெறி, நிறவெறி என பல்வேறு வெறிகளால் இந்த மனித இனம் கூறு போடப்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்வதற்கு இந்த ஆறாவது அறிவான பகுத்தறிவுதான் காரணம் என்பதை பகுத்தறிவாளர்களால் மறுக்க முடியுமா? மதங்களின் பெயரால் கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களைக் கற்பனை செய்து மதப்புரோகிதர்கள் செய்து வரும் அட்டூழியங்கள், ஈவிரகமற்ற கொடூர செயல்கள், கொலை பாதகச் செயல்கள், மதப்புரோகிதர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என மார்தட்டிக் கொண்டு, மதப்புரோகிதர்களின் அனைத்து வகை ஈனச்செயல்கள், அட்டூழியங்கள் , அக்கிரமங்கள், வன்முறைச் செயல்கள் அனைத்தையும் அப்படியே காப்பி அடித்து செய்து வரும் அரசியல்வாதிகள் என்ற அரசியல் புரோகிதர்கள் (தொண்டைத் தொழிலாக்கி தொப்பையை நிரப்புகிறவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே – புரோகிதர்களே), ஏழைகளின் வயிற்றில் அடித்து, அவர்களின் உரிமைகளைப் பறித்து, மதப்புரோகிதர்களையும், ஆட்சியாளர்களையும், அரசியல் வாதிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு குறுக்கு வழிகளில் பல நூறு தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் குவிக்கும் கோடீஸ்வரர்கள், இப்படி அனைவரின் மனச்சாட்சிக்கும் விரோதமான அநியாய, அக்கிரம, அட்டூழிய செயல்களுக்கு இந்தப் பாழும் பகுத்தறிவு தானே காரணம்? இவ்வுலக வாழ்க்கையில் மனிதனுக்கு பகுத்தறிவு மட்டும் இல்லாவிடில், மற்ற பிராணிகளைப் போல், ஐயறிவுடன் மட்டும் வாழ்ந்தால் இந்தப் படுபாதகச் செயல்கள், அட்டூழியங்கள், அநியாயங்கள் இடம் பெறுமா? மனித அமைதி கெடுமா?
கடவுள்களின் பெயரால் மதங்களை கற்பனை செய்து பலவித அநியாயங்கள் நடக்கின்றன என காரணம் கூறி, மனிதப் பகுத்தறிவைக் கொண்டு கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்களோடு, அகில உலகையும் மனிதனையும் படைத்து நிர்வகித்து வரும் ஒரே கடவுளை மறுக்கத் துணிந்த பகுத்தறிவாளர்கள், கடவுளின் பெயரால் வெறியூட்டும் மதங்கள், அரசியலின் பெயரால் அட்டூழியங்கள், கோடீஸ்வர குபேரர்களின் தில்லுமுல்லுகள் என அனைத்திற்கும் காரணமான இந்தப் பகுத்தறிவை அழித்தொழிக்க முற்படுவதில்லையே! ஏன்? மனித வாழ்க்கை இவ்வுலகுடன் முடிவுக்கு வருகிறதென்றால் இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத பகுத்தறிவு ஏன்? ஏன்?? ஏன்??? தாங்களும் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக் கொள்வதாலா? தாங்களும் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கிக் குளித்துக் கொண்டிருப்பதலா? பகுத்தறிவை நியாயப்படுத்துகிறீர்கள்? விடை தாருங்கள் பகுத்தறிவாளர்களே!
பகுத்தறிவு மனிதனுக்கு இயற்கையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது; அதனை அழிக்க முடியாது என்பது பகுத்தறிவாளர்களின் பதிலாக இருந்தால், பகுத்தறிவில்லா ஐயறிவு பிராணிகள் போல் மனிதனும் ஒரு பிராணியே! இவ்வுலகில் வாழ்ந்து மடிவதோடு அவனது முடிவு ஏற்பட்டு விடுகிறது என்று எந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் கூறுகிறீர்கள்? பகுத்தறிவின் மூலம் மனிதப்படைப்பு ஐயறிவு மிருகப் படைப்பிலிருந்து வித்தியாசப்படுகிறது என்பதை உங்களால் பகுத்தறிய முடியவில்லையா?
இவ்வுலக வாழ்ககைக்கு எந்த வகையிலும் தேவைப்படாத, அதே சமயம் இவ்வுலக மனித மற்றும் படைப்புகளின் நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கைக்கு பல வகையிலும் இடையூறு விளைவிக்கும் இந்தப் பகுத்தறிவு ஓர் உன்னத நோக்கத்தோடுதான் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களால் உய்த்துணர முடியவில்லையா?
பகுத்தறிவாளர்களே! நீங்கள் பகுத்தறிவு, பகுத்தறிவு என பீற்றிக் கொள்வது உங்களுக்கிருக்கும் ஐயறிவைக் கொண்டு, அவை கொடுக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்து விளங்கிக் கொள்ளும் அற்ப விஷயங்கள் மட்டுமே. மற்றபடி உங்களது ஐம்புலன்களுக்கு எட்டாத, கட்டுப்படாத நுட்பமான உண்மைகளை கண்டறியும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை; அதாவது மதப்புரோகிதர்கள் கற்பனையில் உருவான கோடிக்கணக்கான பொய்க் கடவுள்களுக்கும், பகுத்தறிவாளர்களாகிய உங்களையும், என்னையும் அகில உலக மக்களையும், அகிலங்களையும் சோதனைக்காக – பரீட்சைக்காக படைத்து சுதந்திரமாக நம்மை செயல்படவிட்டிருக்கும் ஒரேயொரு உண்மைக் கடவுளுக்குமுள்ள வேறுபாட்டை உங்களால் பகுத்தறிய முடியவில்லை. உண்மைக் கடவுளை உய்த்துணரும் நுண்ணறிவு உங்களிடம் இல்லை, சாந்தி மார்க்கத்தின் உறுதி மொழியின் ஆரம்ப பாதியை மட்டும் கூறி, அரைக்கிணறு தாண்டி கிணற்றின் உள்ளே விழும் மிகமிக ஆபத்தான, அபாயகரமான நிலையில் நுண்ணறிவில்லா பகுத்தறிவாளர்களாக நீங்கள் இருக்கிறீர்கள் என குற்றப் படுத்துகிறோம்; முறையாக நுண்ணறிவுடன் பகுத்தறிய வேண்டுகிறோம்.

அபூ பாத்திமா

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4)

ஏமாற்றிய பட்ஜெட் - MH ஜவாஹிருல்லாஹ்

செவ்வாய், 27 மார்ச், 2012

தமிழக அரசின் 2012-13 பட்ஜெட்

சென்னை:சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2012-13 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நிரந்தர சேதம் அடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
* இயற்கை இடர்பாடுகளை சமாளிக்க விரைவாகவும் திறமையாகவும் செயல்படக்கூடிய மாநில பேரிடர் மீட்பு படை ஏற்படுத்தப்படும்.
* முதல்வர் தலைமையில் தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்க விரைவில் சட்டம்.
* கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முதல்கட்டமாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
* 100 பின்தங்கிய வட்டாரங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானத்தில் உள்ள குறைபாடுகளை போக்க ‘மாநில சரிநிகர் வளர்ச்சி நிதி’ என்ற சிறப்பு நிதி உருவாக்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* இந்த ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ.28 ஆயிரம் கோடி.
* பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார திட்டம்’ இந்த ஆண்டில் தொடங்கப்படும். இதற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
* தனியார் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தர 37 மாவட்ட அளவிலான உதவி மையங்கள் ரூ.1.93 கோடியில் அமைக்கப்படும்.
* வட்டாட்சியர் அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்டந்தோறும் ரூ.50 லட்சம் ஒதுக்கீடு.
* இந்த ஆண்டில் ஏழைகளுக்கு ஒரு லட்சம் வீட்டு மனை பட்டா வழங்கப்படும்.
* சென்னை மாநகரப் பகுதியில் ரூ.150 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
* தலா ரூ.1 கோடி செலவில் 13 மாவட்டங்களில் புதிதாக ஓட்டுனர் பயிற்சி பள்ளி ஏற்படுத்தப்படும்.
* நீதித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.736.15 கோடி ஒதுக்கீடு.
* வேளாண் துறைக்கு ரூ.3,805 கோடி ஒதுக்கீடு.
* திருச்சியில் வேளாண் வர்த்தக மேம்பாட்டு மையம்.
* கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க இந்த ஆண்டில் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* 20 கால்நடை மருந்தகங்கள், 50 கால்நடை துணை மையங்கள் அமைக்கப்படும்.
* நீர்வள மேலாண்மை பணிகளுக்கு ரூ.3,624.73 கோடி ஒதுக்கீடு.
* அணைகளை மேம்படுத்த ரூ.745.49 கோடியில் அணைகள் புனரமைப்பு – மேம்பாட்டு திட்டம்.
* பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ.100 கோடி.
* 2012-13ம் ஆண்டுக்கான உணவு மானியம் ரூ.4,900 கோடி.
* இந்த நிதியாண்டில் ரூ.740 கோடி செலவில் 1,500 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்.
* சாலை பராமரிப்பு பணிகளுக்கு ரூ.1180.95 கோடி நிதி ஒதுக்கீடு.
* ரூ.548 கோடி செலவில் புதிதாக 3 ஆயிரம் பஸ்கள் வாங்கப்படும்.
* மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த ஆண்டில் ரூ.750 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க ரூ.3,068 கோடி நிதி ஒதுக்கீடு.
* 14.62 லட்சம் குடிசைகளுக்கு ரூ.14.62 கோடி செலவில் இலவசமாக சிஎப்எல் விளக்குகள் வழங்கப்படும்.
* 60 ஆயிரம் வீடுகளுக்கு ரூ.180 கோடியில் சூரிய மின் விளக்குகள் அளிக்கப்படும்.
* மேலும் 50 கோயில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்படும்.
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர், பழநி தண்டாயுதபாணி கோயில்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
* மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.720 கோடி ஒதுக்கீடு.
* பள்ளி மாணவர்களுக்கான சீருடையில் ஆண்களுக்கு முழுக்கால் சட்டையும், மாணவிகளுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படும். இதற்காக ரூ.329.89 கோடி நிதி ஒதுக்கீடு.
* பசுமை வீடு திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு ரூ.1080 கோடியில் மேலும் 60 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்.
* எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கு இந்த ஆண்டில் ரூ.470 கோடி ஒதுக்கீடு.
* சென்னை நகரில் உள்ள நீர்வழித்தடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க 337 இடங்களில் ரூ.300 கோடியில் சுத்திகரிப்பு செய்ய திட்டம்.
* ஏழைப் பெண்கள் திருமண உதவி திட்டத்துக்கு ரூ.748.39 கோடி ஒதுக்கீடு.
* மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயனாளிகளின் தகுதி 60 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைக்கப்படும்.
* இலங்கை அகதிகளுக்கு 2,500 வீடுகள் கட்டித் தர ரூ.25 கோடி ஒதுக்கீடு.
* ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது வழங்கப்படும் நிதியுதவி, ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* கோதுமை, ஓட்ஸ், ஹெல்மெட், இன்சுலின் மீதான மதிப்பு கூட்டு வரி முழுமையாக ரத்து.
* எலக்ட்ரிக் பைக்குகள், காம்பக்ட் புளோரசன்ட் குழல் விளக்குகள், மரக் குச்சிகள், மரப்பட்டைகள், சானிடரி நாப்கின், டயாபர்களுக்கு மதிப்பு கூட்டு வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
ரூ.1500 கோடிக்கு வரி உயர்வு
* வெளிமாநிலங்களில் இருந்து வாங்கியோ, கொள்முதல் செய்தோ விற்கப்படும் அனைத்து மது வகைகளுக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட விற்பனை நிலையில் 14.5 சதவீத விற்பனை வரி விதிக்கப்படும்.
* ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு குறைவாக தாவர எண்ணெய்களின் விற்பனை அளவு இருந்தால், அதற்கு அளிக்கப்பட்டு வந்த மதிப்பு கூட்டு வரி விலக்கு நீக்கப்பட்டு, அந்த விற்பனைக்கும் 5 சதவீத மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படும்.
* சுற்றுலா, மேக்ஸி மற்றும் தனியார் சேவை வாகனங்கள், ஸ்பேர் பஸ், கட்டுமானத்துக்கு பயன்படும் வாகனங்கள், பிற மாநில ஒப்பந்த வாகனங்கள் மீதான வரிகள் சீரமைக்கப்படும்.
* முன்னுரிமையில் விருப்ப எண்களை பதிவு செய்வதற்கான கட்டணம் இரு மடங்காக உயர்த்தி சில மாற்றங்கள் செய்யப்படும். இந்த மாற்றங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு பொருந்தாது.
* திருத்தி அமைக்கப்பட்ட சொத்து வழிகாட்டி மதிப்பு (கைடு லைன் வேல்யூ) ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
*உலமாக்கள் ஓய்வூதியம் மாதம் ரூ.1000 ஆக அதிகரிப்பு
* விற்பனை ஆவணங்கள் மற்றும் அதே நிலையில் முத்திரை தீர்வை விதிக்கப்படும் ஆவணங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 6 சதவீத முத்திரை தீர்வை, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5 சதவீதமாக குறைக்கப்படும்.
* உள்ளூர் திட்ட அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட்டு வரும் கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டணம் 50 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு சுமார் 1,500 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.

ஞாயிறு, 25 மார்ச், 2012

முஸ்லிம் பெற்றோர்களின் சவால் ! வெல்லப் போகிறோமா ? வீழப் போகிறோமா ?


                                                                                                                                                       An Najaath

 முஸ்லிம் பெற்றோர்களின் சவால் ! வெல்லப் போகிறோமா ? வீழப் போகிறோமா ? தற்போது டீன் ஏஜில் மகன் அல்லது மகளை வைத்துள்ள பெரும்பாலான பெற்றோர்களின் பெரும் கவலை இது ! அதாவது நமது பிள்ளைகள் காதல் கீதல் செய்து தன் வாழ்க்கையை தானே தெரிவு செய்துகொண்டு வழி புரண்டு விடுமோ ? என கவலைப் படாத தாய் தந்தை யாரும் இருக்கமாட்டார்கள்! ஆனாலும் வீடு கட்டவும் நகை நட்டு வாங்கவும் அன்னாடம் பொருளாதார தேடலில் தினம் தினம் அலைகிறோம்! இப்பொழுது வரும் தமிழ் படங்களாக இருக்கட்டும் அல்லது டிவி நிகழ்சிகளாக இருக்கட்டும், ஆண், பெண் இருபாலும் கூச்சம் இல்லாமல் பேசுவதும் அரட்டை அடிப்பதும் காட்டப் படுகிறது. இந்த விஷம் நம் பிள்ளைகளை மட்டுமல்ல, பெற்ற தாய் தகப்பனையும் அறிவு ரீதியாக வீணாக்கிக் கொண்டிருகிறது. கைத் தொலைபேசிகளை கட்டுப் படுத்துவதிலோ, இன்டர்நெட் உபயோகத்தை அவதானிபதாலோ தீர்க்க முடியும் என்பது 10 % உண்மையாக இருக்கலாம். 90 % தீர்வு என்ன வென்றால் குடும்பம் இஸ்லாமாக இருக்கவேண்டும்.பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைப்பட்ட உறவு ஒளிவு மறைவு இன்றி குடும்பத்தினர்களுக்கு மத்தியில் நட்பு இருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் வரும் நாயகன் நாயகி எல்லாம் கேவலமான தொழில் புரியும் கூத்தாடிகள் என்பதை வளரும் தலை முறைக்கு எடுத்து சொல்ல வேண்டும்....இது போன்ற மேலும் கருத்துக் களை ஜும்மா மேடைகளில் அழகாக அறிவுபூர்வமாக எடுத்துச் சொல்ல பள்ளிவாசல் நிர்வாகிகளும் இமாம்களும் முன்வர வேண்டுகிறோம். எல்லா ஜமாஅத் களும் இந்த முயற்சிகளை செய்யுங்கள்".

செவ்வாய், 20 மார்ச், 2012

தொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…


இஸ்லாம் கடமையாக்கிய ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவ நம்பிக்கைக்கு அடுத்தபடியாக தலையான கடமையாக தொழுகை இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. இந்தச் சிறிய தொகுப்பில் ஒரு முஸ்லிம் எதற்காகத் தொழ வேண்டும், அதனால் ஏற்படும் பயன்கள் என்ன மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறுவதைப் பார்ப்போம்.
1. தொழுகையின் அவசியம்: -
மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை!
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது: -
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும்.
                        அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்


எல்லாத் தொழுகைகளையும் பேணித் தொழ வேண்டும்:-
எல்லாத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகளையும் பேணித் தொழுது கொள்ளுங்கள். தொழுகையின் போது அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்தோடு நில்லுங்கள். (அல்குர்ஆன் 2 : 238)
போர்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்த வேண்டும்: -
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்; அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும்           . (அல்குர்ஆன் 4:102)
தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்!

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள்.      (அல்குர்ஆன் 23:9-11)

ஜமாத்அத்தோடு தொழவேண்டிய அவசியம்: -
நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள்.
                                                                           (அல்குர்ஆன் 2 : 43)
அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்:-

அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் – அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது; ஆதாரம் : புகாரி

2. தொழுகையின் பலன்கள் : -
தொழுகை பாவக்கறைகளைப் போக்குகின்றது: -
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி). ஆதரம்: ஸஹீஹுல் பூகாரி, பாகம் 1, அத்தியாயம் 9, எண் 528
தொழுகை தீய காரியங்களை அகற்றிவிடும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்’ (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி), ஆதாரம்: ஸஹீஹுல் பூகாரி, பாகம் 1, அத்தியாயம் 9, எண் 526

மானக்கேடாவைகளைத் தடுக்கிறது: -
அல்லாஹ் கூறுகிறான்: -
(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும், அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன் 29:45)
உரிய நேரத்தில் உள்ளச்சத்துடன் தொழுபவரை மன்னிப்பது அல்லாஹ்வின் பொறுப்பு:-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ – இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.’ அறிவிப்பவர்: : உபாதா பின் ஸாமித் (ரலி), ஆதாரம்: அபூதாவூது
தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும்: -
‘எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு – அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் .

அறிவிப்பவர்:: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), ஆதாரம்: முஸ்னத் அஹமத், இப்னுஹிப்பான்.
தொழுபவர்கள் மார்க்கத்தில் சகோதரர்கள்: -
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)
3. தொழுகையை விடுவதனால் ஏற்படும் விளைவுகள்: -
தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: -
அல்லாஹ் கூறுகிறான்: -
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். ஆதாரம்: முஸ்லிம்.
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி
தொழுகையை விடுவோர் நரகில் நுழைவார்: -
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)
தொழாதவர்கள் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான்: -
யார் தொழுகையைப் பேணித் (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். யார் அதை பாதுகாத்துத் தொழ வில்லையோ, அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவன் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)
சடைந்தவர்களாக தொழுவோரின் தான தர்மங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது: -
அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை. (அல்குர்ஆன் 9:54)
ஜமாஅத்தாக தொழ வராதோரின் வீடுகளை நபி (ஸல்) அவர்கள் தீயிலிட்டுக் கொளுத்த விரும்பினார்கள்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எடுத்துக்கொள்பவர் அறிவில்லாத மக்கள்: -
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், – அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
                                                                                                             (அல்குர்ஆன் 5:58)
எனதருமை சகோதர சகோதரிகளே, அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்ட தொழுகையை விடுவதன் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திக்க கடமைப்பட்டடுள்ளோம். ஷைத்தானின் சோம்பல் என்னும் வலையில் சிக்க விடாமல் அல்லாஹ் என்னையும், உங்களையும் மற்றும் முஸ்லிமான நம் அனைவரையும் பாதுகாத்து தொழுகையை முறைப்படி தொழுவோரின் கூட்டத்தாருடன் சேர்த்துவைத்து நம்மை சுவனபதியில் சேர்த்தருள்வானாகவும். ஆமீன்

சனி, 3 மார்ச், 2012

ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்ல விரும்பும் முஸ்லிம்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகத்தில் இருந்து விண்ணப்பத்தினைப் பெற்று பூர்த்தி செய்து ஏப்ரல் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் இயங்கும் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையதளத்தில் இருந்தும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை நகல் எடுத்தும் பயன்படுத்தலாம். பன்னாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பம் தரவிறக்கம் செய்ய;
                                                           http://www.hajcommittee.com/index.php?value=download_fm2012

தனியாக இருக்கும் பொழுது மாரடைப்பு வந்தால்......??

தனியாக இருக்கும் பொழுது மாரடைப்பு வந்தால்......??


வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு... வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,
ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது
இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..
நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:
"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ
ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,
இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,
இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..
பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..
இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..
உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!!!
--சகுபர் சாதிக்