புதன், 20 ஜனவரி, 2016

ரங்கராஜ் பாண்டேவின் ஈயடிச்சான் காப்பி

ரங்கராஜ் பாண்டேவின் ஈயடிச்சான் காப்பி



து.கொ.ப.செ பதவி பறி போய், இன்னோவா பறி போகுமா என்று அச்சத்தில் இருக்கிற நா.ச வுடன் தந்தி டி.வியில் ரங்கராஜ் பாண்டே எடுத்த நேர்காணலை 02.01.2016 இரவு பார்த்தேன். குடும்பத்தோடு ரசிக்கிற காமெடி படம் போல அந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

நா.ச வின் பதவி பறிப்பிற்கு காரணம் என்று சொல்லப்படுகிற குணசேகரன் எடுத்து01.01.2016 அன்று புதிய தலைமுறையில் ஒளிபரப்பான  நேர்காணலின் பதிவை இன்றுதான் யுடியூபில் பார்த்தேன்.

திரு குணசேகரன் என்ன கேள்விகளையெல்லாம் 01.01.2016 அன்று கேட்டாரோ, அதைத்தான் 02.01.2016 அன்று ரங்கராஜ் பாண்டே கேட்டுள்ளார்.

ஆக சொந்த சரக்கில்லாமல் அடுத்தவரை காப்பியடித்துள்ளார் ரங்கராஜ் பாண்டே என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது.

இப்படியிருக்கும்போதே இவரது வெட்டி பந்தாவுக்கும் உதாருக்கும் அளவே இல்லாமல் இருக்கிறது.

S.Raman, Vellore

திங்கள், 9 ஜூன், 2014

காஷ்மீர், 370 பிரிவு, சில உண்மைகள்


காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக முழுமையான விபரங்களோடு ஒரு
புத்தகத்தை எழுதியவர் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான 
தோழர் கி.இலக்குவன். 370 பிரிவு சர்ச்சை தொடர்பாக அவர் எழுதிய 
கட்டுரை பல உண்மைகளை உங்களுக்கு தெரிவிக்கிறது. அவசியம்
படியுங்கள். வாய்ப்பிருந்தால் பாரதி புத்தகாலயத்தில் அந்த 
புத்தகத்தையும் வாங்கிப் படியுங்கள்





நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் பதவியேற்றதையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ஏன் தொடரவேண்டும் என்ற விதத்தில் பெரும் சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது,காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன 370 வது பிரிவினை அகற்றுவது குறித்து விவாதம் நடத்தப்படவேண்டும் என பிரதமர் அலுவலக இணையமைச்சரான ஜிதேந்திர சிங் ஒரு கருத்தை வெளியிட்ட பின்னர் தான் இந்த சர்ச்சை வெடித்துள்ளது,370 வது பிரிவை நீக்கும் ஆலோசனை குறித்து காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்,இதற்கு பதிலடியாக காஷ்மீர் என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா எனறு ஆர்எஸ்எஸ் தலைவர் ராம் மாதவ் ஆண்வத்துடன் கெள்வி எழுப்பியுள்ளார் 

அரசியல் அமைப்புச்சட்டத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு இணைக்கப்பட்ட வரலாற்றை முதலில் நினைவு படுத்திக்கொள்வோம் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைப்பதற்கான அமைப்பில் பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண சட்டமன்றங்களால்தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் சமஸ்தான மன்னர்களின் பிரதிநிதிகளும் இடம் பெற்றிருந்தனர் இந்தியாவுடன் இணைய விரும்பாத காஷ்மீர் மன்னர் அரிசிங் இந்த அமைப்பில் சேரமுடியாது என்று மறுத்து விட்டார், 1947 அக்டோபரில் பாகிஸ்தானிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு படைகள் ஸ்ரீநகருக்கே வந்து விடலாம் என்ற நிலையில் ஜம்மு வுக்கு தப்பியோடிய அரிசிங்வேறு வழியின்றி 1947 அக்டோபர் 26ந்தேதியன்று சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொள்ளும் ஆவணத்தில் கையொப்பமிட்டார்,அதன் படி பாதுகாப்பு அயலுறவு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை தொடர்பான அதிகாரங்களே மத்திய அரசுக்கு இருக்கும்,பிற தலைப்புகள் தொடர்பாக இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் திருத்தம் எது வும் கொண்டுவரவேண்டுமானால் மன்னரிடமிருந்து எழுத்து வுடிவில் ஒப்புதல் பெறவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது

ஜம்மு/காஷ்மிர் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு மாநிலம் எனவே அது பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பிரி ட்டிஷார் விரும்பினர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுன்ட் பேட்டன்பிரபு மன்னர் அரிசிங்கை சந்தித்து இக்கருத்தை நேரடியாக வே தெரிவித்தார் ஆனால் மன்னர் அரிசிங் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ காஷ்மீர் இணைக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் ,காஷ்மீர் தனது ஆளுகையின் கீழ் தனிநாடாக இருக்கவேண்டும் என்று விரும்புவதாகத்தெரிவித்தார், காஷ்மீருக்கு தனி அந்தஸ்து கூடாது என்று இன்று கூறும் இந்துத்வா வாதிகளின் குருபீடமான ஆர்எஸ்எஸ் சும் பாஜகவின் முன்னோடியான பிரஜா பரிஷத் தும் மன்னரின் தனிநாட்டுக்கோரிக்கையை ஆதரித்தன 


இந்துக்கள் பெரும்பான்மையினராகவும் மன்னர் முஸ்லிமாகவும் இருந்த ஐதராபாத் மற்றும் ஜுனாகட் சமஸ்தானங்களின் இணைப்பு எவ்வாறு பெறப்பட்டது என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும் இந்த இரண்டு முஸ்லிம் மன்னர்களும் தங்கள் சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்பினர்,அந்த சமஸ்தானமக்கள் இந்தியாவுடனேயே இணையவிரும்பியதைக்கருத்தில் கொண்டு இந்தியராணுவம் இந்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்ட பிறகே அவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டன காஷ்மீரைப் பொருத்தவரை இன்றைய காஷ்மீர் முதல்வரின் பாட்டனாரும் காஷ்மீர் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும்திகழ்ந்த ஷேக் அப்துல்லா காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதையோ தனிநாடாக இருப்பதையோ விரும்பவில்லை அது இந்தியாவுடன் தான் இணைய வேண்டும் என்ற தெளிவான நிலையை எடுத்திருந்தார் ஷேக் அப்துல்லா என்ற காஷ்மமீர் மக்களின் தலைவரின் ஆதரவு கிடைத்ததால் தான்முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக்கொண்ட காஷ்மீர் இந்தியாவுடன் இணைவது சாத்தியமாயிற்று


இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை வடிவமைக்கும் அவையில் மன்னர் அரிசிங் இணையமறுத்தது குறித்து முன்னரே குறிப்பிட்டுள்ளோம் அதனால் ஜம்மு காஷ்மீர் தவிர பிற அனைத்து சமஸ்தானங்களின்அரசியல் அமைப்பு சட்டவிதிகள் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தில் இணைக்கப்பட்டன,காஷ்மீர் இணைப்புகுறித்து முடிவுஎடுப்பதற்காக 1949 மேமாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரமாற்றம் தொடர்பாக காஷ்மீர் மாநிலத்துக்காக தனியாக அமைக்கப்படும் அரசியல் அமைப்புச்சட்ட அவை முடிவு செய்யும் என்று முடிவு செய்யப்பட்டது அதுவரையிலான காலத்திற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு இணைக்கப்பட்டது அந்த விதியின் படி காஷ்மீர்மாநிலம் தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கான இந்தியநாடாளுமன்றத்தின் அதிகாரங்களுக்கு வரம்பிடப்பட்டன,இணைப்பு ஆவணத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவையான பாதுகாப்பு அயலுறவு தகவல் தொடர்பு ஆகியவை குறித்து மட்டுமே நாடாளுமன்றத்தில் சட்டமியற்றலாம்,அந்த இணைப்பு ஆவணத்தில் இல்லாதவை குறித்து நாடாளுமன்றம் சட்டமியற்ற வேண்டுமானால் காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவேண்டும்


இதே அடிப்படையில் தான் காஷ்மீருக்கான தனி அரசியல் அமைப்புச்சட்டமும் வடிவமைக்கப்பட்டது,370 வது பிரிவு குறித்து ஷேக் அப்துல்லாவுக்கும் இந்திய தேசிய தலைவர்களுக்குமிடை யே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை யடுத்து விவாதங்கள் நடத்தப்பட்டு 1952ஜுலை24ந்தேதியன்று ஷேக் அப்துல்லாவும் ஜவகர்லால் நேருவும் கையெழுத்திட்ட டெல்லி ஒப்பந்தம் என்ற ஒன்று இறுதி செய்யப்பட்டது, அந்த ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இணைப்பு ஆவணத்தில் இடம் பெற்றுள்ள மூன்று தலைப்புகள் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருக்கும் இவை தவிர மற்றவை எல்லாம் காஷ்மீர் அரசாங்கத்தின் அதிகார வரம்புக்குள் இருக்கும் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர்கள் குடியுரிமை பெற்றவர்களாக இருப்பார்கள் காஷ்மீர் மாநிலக்குடிமக்களுக்கு விசேஷ உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கும் அதிகாரம் காஷ்மீர் சட்டமன்றத்துக்கு வழங்கப்படும் காஷ்மீர் மாநிலத்துக்கு என்று தனிக்கொடி அனுமதிக்கப்படும் காஷ்மீர் மாநில ஆளுநர் சதாரி ரியாசத் என்று அழைக்கப்படுவார் அவர் காஷ்மீர் சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார் காஷ்மீர் மாநில முதல்வர் பிரதமர் (வாசிர்/இ/ஆசாம்) என்று அழைக்கப்படுவார்


இந்துக்கள் பெரும்பான்மையினராக இருக்கும் ஒரு நாட்டுடன் இணையும் போது காஷ்மீரிகள் என்ற தங்களது தனித்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் 370 வது பிரிவு இந்தியஅரசியல் அமைப்புச்சட்டத்தில் இடம் பெற்றிருந்தது ஆனால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் இதனை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை காஷ்மீர் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் குடியரசுத்தலைவரின் உத்தரவின் அடிப்படையில் பிற தலைப்புகளின் மீதும் சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றலாம் என்ற விதியைப்பயன்படுத்தி 370 வது பிரிவை ஏற்கென வே நீர்த்துப்போகுமாறு அவர்கள் செய்து விட்டனர்,

1954 தொடங்கி இன்று வரை காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு அதிகாரங்கள் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டு விட்டன மத்திய பட்டியலில் இடம் பெற்றிருந்த 97 தலைப்புகளில்94 தலைப்புகள் குறித்து காஷ்மீர் தொடர்பாகவும் சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மாற்றப்பட்டது,பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 47 தலைப்புகளில் 26 தலைப்புகள் காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்துமாறு மாற்றப்பட்டன,இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் 395 பிரிவுகளில்260 பிரிவுகள் காஷ்மீருக்கும் பொருந்துமாறு வழி வகை செய்யப்பட்டனஆக காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்தை வழங்கிய 370 வது பிரிவு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு விட்டது காஷ்மீர் குடியுரிமை,பிறமாநிலங்களிலிருந்து வந்து தொடர்ந்து தங்கி யிருப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலை பிற மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்துக்களை வாங்குவதற்கு உள்ள தடை போன்ற சில அம்சங்கள் மட்டுமே இப்போது நீடிக்கின்றன 

எந்த ஷேக் அப்துல்லாவின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதோ அதே ஷேக் அப்துல்லாவின் மீது மத்திய அரசு நம்பிக்கையிழந்த நிலையில்1953 ஆகஸ்ட் 8ந்தேதியன்று அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் காஷ்மீர்மக்களின் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்று உலகத்துக்கு காட்டுவதற்காக டெல்லியின் உத்தரவுக்கு அடிபணிந்து நடப்பவர்களே காஷ்மீர் ஆட்சியாளர்களாக இருக்கும் விதத்தில் மோசடித்தேர்தல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டனஇதனால் காஷ்மீர் மக்களுக்கும் மத்திய அரசுக்குமிடையேயான இடைவெளி அதிகரித்தது,,தொழில் வளர்ச்சிக்கோ வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கோ கவனம் செலுத்தப்படாத நிலையில் இளைஞர்கள் நம்பிக்கை இழந்தனர்,அவர்கள் மத்தியில் தீவிர வாதம் மத அடிப்படை வாதிகளாலும் அன்னிய சக்திகளாலும் துண்டி விடப்பட்டது மக்களின் அதிருப்திகளின் விளைவாக எழுந்தபோராட்டங்களை அடக்கு வதற்கு ராணுவம் பயன்படுத்தப்பட்டது 

அண்மை ஆண்டுகளில் தீவிர வாதம் ஓரளவுக்கு மட்டுப்பட்டுள்ளது,தேர்தல்கள் ஓரளவுக்கு முறையாக நடத்தப்பட்டன,மன்மோகன்சிங் அரசுக்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற போது காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது காஷ்மீரின் இரண்டு பகுதிகளுக்கும் தன்னாட்சி உரிமை வழங்குவது அதில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது,

இப்போது இந்துத்வா வாதிகளின் விருப்பப்படி 370 வது பிரிவு முற்றிலும் நீக்கப்படுமானால் காஷ்மீர் மக்களுக்கான தனி அடையாளங்கள் எல்லாம் இல்லாமல் போகும் நிலை ஏற்படுத்தப்படும் ,காஷ்மீர் மக்கள் இந்தியாவிலிருந்து மேலும் அந்நியப்படும் நிலையே ஏற்படும் காஷ்மீரில் ஊடுருவி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவரும் தீவிரவாத சக்திகளின்செயல்களுக்கு உரமளிப்பதாக அமையுமேயன்றிஇது தேச நலனுக்கோ ஒருமைப்பட்டுக்கோ பயனளிக்காது மேலும் காஷ்மீருக்குள் செயல்பட்டுவரும் பிளவுவாத சக்திகளின் கரங்களை வலுப்படுத்தும்காஷ்மீர் இந்தியாவுடன்தான் நீடித்து இருக்கவேண்டும் என்ற கருத்துடன் செயல்படும் காஷ்மீர் மாநில மதச்சார்பற்ற சக்திகளையும் பலவீனப்படுத்தும்,எனவே மக்களை பிளவுபடுத்தும் இத்தகைய அணுகுமுறையைக்கை விட்டு மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அடிப்படைபிரச்சனைகளின் மீது புதிய அரசு கவனம் செலுத்தவேண்டும்

சனி, 24 மே, 2014

இந்தியாவின் ராஜபக்சே

தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லியுள்ளார்இந்தியாவின் ராஜபக்சே மோடி – இதை நான் சொல்லவில்லை

மோடி வெற்றி பெற்றதற்கும் மத்திய அரசில் தமிழகத்திற்கு முக்கியமான பாத்திரம் இல்லாமல் போனதற்கும் இலங்கை அரசு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. அந்த மகிழ்ச்சியை ஒரு அமைச்சர் வெளிப்படுத்தவும் செய்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே இன்னும் ஒரு படி மேலே சென்று ஆசியாவில் இன்னொரு ராஜபக்சே
தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லியுள்ளார்
பாம்பின் கால் பாவர்களுக்கு சிறுபான்மை மக்களை  கொலை செய்தவர்களை பிடிக்கத்தான் செய்யும்.  இது இயல்பான புரிதல். அவங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி  நல்லாவே இருக்கும்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

ஆண் சிறந்தவனா? பெண் சிறந்தவளா?


 





ஆணையும் பெண்ணையும் சமப்படுத்துகின்ற ஒரு முயற்சி பெண்ணிலைவாதம் என்ற பெயரில் இன்று பரவலாக இடம்பெற்று வருகின்றது,

ஆனால் எம்மைப் படைத்த இறைவன் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் என்பதை அல்குர்ஆனில் மிகத் தெளிவாக சொல்லி விட்டான், ஆணை நேரடியாக மண்ணால் படைத்த அல்லாஹுத் தஆலா பெண்ணை அந்த ஆணிலிருந்துதான் படைத்தான்.

இது ஆண் சிறந்தவனா? பெண் சிறந்தவளா? என்பதற்கான விவாதமல்ல. மாற்றமாக படைக்கப்பட்ட விதத்திலிருந்தே வித்தியாசப்படும் இந்த ஆணையும் பெண்ணையும் ஒரே மாதிரி நோக்க வேண்டும் என்பது மனித இயல்புக்கெதிரான சவாலாகும்.

ஆனால் மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் ஆணும் பெண்ணும் சமன் என்று கூறியவர்கள் எல்லாம் பெண்ணின் மானத்தைக் கப்பலேற்றும் வேலையைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை என்பதுதான், அது மட்டுமல்ல இவர்கள் சொல்வது போல் உண்மையில் ஆணும் பெண்ணும் சமனாக இருந்தால் ஒலிம்பிக்கில் ஆண்களையும் பெண்களையும் ஒரே போட்டியில் ஒன்றாகக் கலந்து கொள்ள வைக்கலாம் தானே! கிரிக்கட் போட்டிகளையும் உதைபந்தாட்டப் போட்டிகளையும் ஆண்களும் பெண்களும் கலந்து வைக்கலாம் தானே!! ஏன் இவர்கள் அப்படியெல்லாம் செய்வதில்லை? அப்படி யாராவது செய்தால் கூட அதனை அநீதி என்று கூப்பாடு போடுவார்கள்.

ஆனால் இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் போட்டி போடுகின்றவர்களாகப் பார்க்கவில்லை, மாற்றமாக மாற்றமாக முழுமைப்படுத்துகின்றவர்களாகத் தான் பார்க்கின்றது, இருவரையும் இஸ்லாம் ஓரிடத்தில் சமப்படுத்துகின்றது, அதுதான் தக்வாவாகும். அந்த இடத்தில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை யார் அதிகம் தக்வா உள்ளவராக இருக்கின்றாரோ அவர்தான் அல்லாஹ்வின் பார்வையில் சிறந்தவராவார்.

ஆனால் உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக, அறிவு ரீதியாக, உணர்வுகள் ரீதியாக, ஹோர்மோன்கள் ரீதியாக என அனைத்து வகையிலும் ஆண்களும் பெண்களும் வித்தியாசப்படுகின்றார்கள், ஏன் இந்த வித்தியாசம், வித்தியாசமான இந்த இரண்டு இயல்புகளும் ஒன்றுசேரும் போதுதான் மனிதவாழ்க்கை முழுமை பெறுகின்றது. அதை விடுத்து விட்டு பெண்களும் ஆண்களைப் போன்று இருக்க வேண்டும், ஆண்கள் செய்கின்றவற்றை பெண்களும் செய்ய வேண்டும் என்ற அநீதியான கோஷம் எழுந்ததன் விளைவுதான் இன்று வீட்டிலும் நாட்டிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.

உலகளாவிய ரீதியில் பொதுவாகவும் மேற்கில் குறிப்பாகவும் குடும்ப வாழ்க்கை சீரழிந்து போயிருப்பதற்கான அடிப்படைக் காரணம் பெண்கள் ஆண்களின் வேலையை செய்யப் போனதுதான். இதனை நான் சொல்லவில்லை, பெண்ணிலைவாதத்தின் தூண்களில் ஒன்றாக இருந்த LAURA DOYLE என்ற பெண்மணி சொல்கின்றார், இரண்டு மூன்று திருமணங்கள் முடித்தும் அவரது திருமண வாழ்க்கை தொடர்ந்தும் தோல்வியிலேயே முடிவுற்றிருக்கின்றது, அதன் பின்னர் தான் அவர் அதற்கான காரணத்தை சிந்திக்கின்றார்... அப்போது அவருக்கு ஓர் உண்மை புலப்படுகின்றது, 'நான் ஒரு பெண்ணாக இல்லை, அது தான் காரணம்' என்பதை அவர் கண்டறிகின்றார். அதன் பின்னர் மீண்டும் இன்னொரு திருமணம் முடித்து இன்று வரை தனது கணவனுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடாத்தி வருகின்றார். தனது அனுபவத்தை "THE SURRENDERED WIFE" என்ற ஒரு புத்தகத்தில் அவரே எழுதுகின்றார். (இந்த புத்தகத்தை யாரும் AMAZON.COM இல் வாங்கலாம்)

இதுதான் யதார்த்தம், இந்த யதார்த்தத்தை இன்று யாரெல்லாம் இந்த பிழையான, மனித இயல்புக்கு ஒத்துவராத சிந்தனைக்கு காரணமாக இருந்தார்களோ அவர்களே ஒப்புக் கொள்கின்றார்கள், ஆனால் கவலை யாதெனில் இந்த முஸ்லிம் சமூகத்துக்குள் காலாவதியாகிப் போன இந்த சிந்தனையின் சீடப்பிள்ளைகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான்.

யாராவது திருமணம் முடித்து திருமண வாழ்வில் வெற்றி பெற வேண்டுமாயின் அவர்கள் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் என்ற உண்மையை விளங்கி அந்த வித்தியாசங்களைப் படித்து அதனை தமது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாத போது திருமணங்கள் நடக்கும் ஆனால் இருமனங்களும் ஒரு நாளும் ஒத்துவாழ முடியாது.


ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.

ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )

மொழி.

பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்!
அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)

ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

வாகன‌ம் ஓட்டுதல்.

வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம், ஆண்களின் ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.

பொய்ப்பேச்சு!
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.
காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்.

பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.



தேவைகள்.

மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சியின்மை.

ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.
உரையாடல்.

பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

நடவடிக்கை.

பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!

ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.